உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை ஊர்வசி! மகளுக்கு இப்படி ஒரு வரமா?அப்படியே அம்மாவை உரிச்சு வச்ச மாதிரி!
சென்னை: தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி. 1980களில் தொடங்கி தற்போது வரை நாயகி, காமெடியன், குணச்சித்திர வேடம் என வெரைட்டியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது அவரது மகளும் திரைத் துறைக்கு வந்திருக்கிறார். அந்த படத்தை ஊர்வசியே தயாரிக்கும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஊர்வசி. 1979 ஆம் ஆண்டு கதிர் மண்டபம் என்ற படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமான அவர், பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தார். தலையணைமந்திரம், மைக்கேல் மதன காம ராஜன், பாரதம், ஸ்படிகம், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு காமெடி வேடங்களிலும், அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர், நடிகர் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் அவரை மூன்றாவது ரவுண்டு வர வைத்திருக்கிறது. திரையுலகில் ஊர்வசியின் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக, வெகுளித்தனமான அவரது பேச்சு பல ரசிகர்களை கவர்ந்தது. அவரது குடும்பமும் கலை குடும்பம் தான். திருமலை, தூள், திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களில் தமிழ் படங்களிலும் பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ள மனோஜ் கே ஜெயனை 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஊர்வசி.
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு தேஜலக்ஷ்மி என்ற மகள் பிறந்தார். 2008 ஆம் ஆண்டு மனோஜ் கே ஜெயனை பிரிந்த ஊர்வசி, 2013 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சிவப்பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையுலகில் தனது தாயையும் தந்தையும் போலவே தேஜலட்சுமியும் கால் பதிக்கிறார்.
சர்ஜானோ நாயகனாக நடிக்கும் சுந்தரினியாயவள் ஸ்டெல்லா என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியாக களமிறங்குகிறார் தேஜலட்சுமி. டிமான்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் சர்ஜானோ நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் தொடக்க விழா எர்ணாகுளத்தில் நடந்த நிலையில் அதில் கலந்து கொண்ட ஊர்வசி தனது மகள் நாயகியாக நடிக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
மேலும் இந்த படத்தை ஊர்வசி தான் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஊர்வசியும் மனோஜும் ஆரம்ப காலகட்டங்களில் நடிப்பு துறையில் கால் பதிக்க போராடிய நிலையில் தங்களது மகள் முதல் படத்திலேயே நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி பெருமை கொள்வதாக மனோஜ் கூறி இருக்கிறார். ஊர்வசியிடம் ஆசி பெற்ற பிறகு தேஜு நடிக்க வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் கதையை மனோஜிடம் தான் முதலில் இயக்குனர் சொன்னதாகவும் ஊர்வசி கதையை ஓகே செய்தால் மட்டுமே தேஜு நடிப்பார் என கூறியதாகவும், ஊர்வசி ஒப்புக் கொண்ட பின் தான் அவர் நடிக்க வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மனோஜ் கே ஜெயன்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications