Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும்" என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    ஸ்டாலின் அண்ணா... சீமான விடாதீங்க..உங்களைத்தான் நம்பி இருக்கேன்... நடிகை விஜயலட்சுமியின் பரபர வீடியோ!

    இந்த முறை திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே, பெண்களுக்கான பாதுகாப்பை அளிப்பதில் உறுதியாக இருக்கிறது.. எங்கெல்லாம் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சனைகள் எழுகிறதோ அங்கெல்லாம், பாரபட்சமே பார்க்காமல் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "எந்த சாமியாருக்கும் இந்த அரசு பணியாது.. யார் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் உரிய விசாரணையை முதல்வர் எடுப்பார்.. பாலியல் குற்றவாளிகளின் வாலை ஸ்டாலின் ஒட்ட நறுக்குவார்" என்று கூறியிருந்தார்.

     விஜயலட்சுமி

    விஜயலட்சுமி

    அதுதான் சமீப காலமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி, சிவசங்கர் பாபா முதல் மாஜி அமைச்சர் மணிகண்டன் வரை கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.. இதுதான் பெண்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.. அந்த வகையில் நடிகை விஜயலட்சுமிக்கும், புது நம்பிக்கை பிறந்துள்ளது.. தன்னுடைய பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற முனைப்பில், திமுக அரசின் கதவை தட்டி உள்ளார்.

     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர் நடிகை விஜயலட்சுமி... இதை பல முறை மீடியா முன்பு பகிரங்கமாகவே சொல்லி உள்ளார்.. புகார் தந்துள்ளார்.. அதேபோல, தனிப்பட்ட முறையில் வீடியோ வெளியிட்டும், சீமானை தாக்கி பேசியிருந்தார்.

    மணிகண்டன்

    மணிகண்டன்

    இப்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டதை போல் தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி மறுபடியும் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

    வீடியோ

    வீடியோ

    "சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    திமுக

    திமுக

    சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

    கர்த்தர்

    கர்த்தர்

    கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டி கொண்டு வருகிறார்.. இதுவரைக்கும் சீமான் வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருந்துட்டு வர்றார்.

    முதலமைச்சர்

    முதலமைச்சர்

    திமுக இன்னைக்கு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறதுன்னு சொல்றாங்களே, அப்படின்னா நாம் தமிழர் கட்சியும் இன்னைக்கு இதைதான் பண்ணியிருக்காங்க.. சீமான் இன்னைக்கு எதை சுட்டிக் காட்டுகிறாரோ, அதைதான் இவ்வளவு காலம் நானும் சுட்டிக்காட்டிட்டு வர்றேன். அதனால், முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கு சம்பந்தமா நடவடிக்கை எடுக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

    அதிமுக

    அதிமுக

    நான் பப்ளிசிட்டிக்காக இதை சொல்லவில்லை.. என்னுடைய வழக்கு பெரிது.. இதை அதிமுகவை வைத்து அன்னைக்கு மூடிட்டாங்க.. அதிமுக ஆட்சியில் எனக்கு நியாயமே கிடைக்காமல் செய்தாங்க.. இன்னைக்கு வரைக்கும் அவருடைய ஆட்கள் என்னை அசிங்கமா பேசிட்டுத்தான் இருக்காங்க.

    நியாயம்

    நியாயம்

    இன்னைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு நியாயத்தை வழங்கிட்டு வரும்போது, ஒரு பெண்ணுடைய வாழ்க்கை கேவலம் கிடையாது, அது திமிரின் உச்சம் என்பதை காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கறேன்.. திமுகவில் இருக்கும் பெரியவங்க இந்த வீடியோவை பாருங்க.. யார் கிட்ட கொண்டு போய் சேர்க்கணுமோ, தயவுசெய்து சேர்த்துடுங்க. திமுக எனக்கு நியாயம் வாங்கி தரணும்... நம்பிக்கையா காத்துக்கிட்டு இருக்கேன்" என்று தெரிவித்துள்ளார்.

     நடவடிக்கையா?

    நடவடிக்கையா?

    சமீப காலமாக முதல்வர் ஸ்டாலினுடன், சீமானுக்கு நல்ல இணக்கம் இருந்து வருகிறது.. இவர்களின் ஒவ்வொரு முறை சந்திப்பும், நட்பான பேச்சும் சோஷியல் மீடியாவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. ஒருவேளை வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் தமிழருடன் திமுக கூட்டணி வைக்கக்கூடும் என்ற அளவுக்கு யூகங்களும் கிளம்பி வரும் நிலையில், சீமானுக்கு எதிரான இந்த வழக்கை திமுக கையில் எடுக்குமா? விஜயலட்சுமியின் கண்ணீர் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+