சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு?

ஜெயலலிதா சமாதியில் நடிகை விந்தியா மாம்பழ படையல் வைத்து வணங்கினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vindhiya: ஒரு கூடை மாம்பழத்தோடு பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு?- வீடியோ

    சென்னை: கூடையும் கையுமாக விந்தியாவை பார்த்ததும் பீச்சுக்கு வந்தவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. ஜெயலலிதாவின் தீவிரமான ஆதரவாளர் விந்தியா என்று தெரிந்தாலும், இந்த நேரத்தில் இவர், இங்க என்ன செய்ய போகிறார் என்றுதான் புரியாமல் விழித்தனர்!

    ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கும். குண்டுகல்யாணம், குண்டு ஆர்த்தி, விந்தியா, ராமராஜன், என பட்டியல் போய் கொண்டே இருக்கும்.

    தேர்தல் என்றாலே இவர்கள்தான் மக்களிடம் சென்று பேசி அதிமுகவுக்காக வாக்கு சேகரிப்பார்கள். அனைவருக்குமே சரிசமமாக வாய்ப்புகளை வழங்குவார் ஜெயலலிதா!

    இதுவா, அதுவா.. இருக்கிறோமோ.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் இதுவா, அதுவா.. இருக்கிறோமோ.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    ஆனால் இந்த முறை இவர்கள் எல்லாம் மிஸ் ஆனார்கள். விந்தியா மட்டும் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தார். முதல்வேலையாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற விந்தியா, மண்டியிட்டு வணங்கி, பின்னரே தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

    ஜெ. சமாதி

    ஜெ. சமாதி

    இப்போது திரும்பவும் திடீரென விந்தியா பீச் பக்கம் வந்தார். ஜெ.நினைவு நாள், பிறந்த நாள், இது எதுவுமே இல்லாமல் விந்தியா ஏன் சமாதிக்கு வந்தார் என்ற குழப்பம் ஏற்பட்டது. கூடை நிறைய மாம்பழங்களை சமாதியில் வைத்துவிட்டு மண்டியிட்டு கும்பிட்டார்.

    மாம்பழம்

    மாம்பழம்

    ஜெயலலிதாவின் தீவிர ரசிகையும் விசுவாசியுமான நடிகை விந்தியா ஜெயலலிதாவின் சமாதியில் மாம்பழம் படையல் வைத்து விநோதமாக அஞ்சலி செலுத்தினார்.

    தோட்டம்

    தோட்டம்

    பிறகுதான் விஷயம் புரிந்தது, விந்தியாவுக்கு ஆந்திரா அருகே சந்திரகிரியில் மாம்பழ தோட்டம் இருக்கிறது. இங்கு விளையும் மாம்பழங்களை வருஷா வருஷம் ஜெயலலிதாவுக்கு தருவது வழக்கம். 5 வருடமாக போயஸ் கார்டனுக்கு, தனது தோட்டத்து மாம்பழங்களை விந்தியா தந்துள்ளார். அதை ஆசையாக வாங்கி கொண்ட ஜெயலலிதா பழங்கள் ரொம்ப ருசியாக இருக்கிறது என்ற அபாரமாக புகழ்ந்து தள்ளுவாராம்.

    படையல்

    படையல்

    தற்போது ஜெ. இறந்துவிட்டதால், 2 வருடமாக இப்படித்தான் மாம்பழங்களை கொண்டு வந்து சமாதியில் படையல் வைத்துவிட்டு போகிறார் விந்தியா. இப்போது மாம்பழ சீஸன் என்பதால், விந்தியா தோட்டத்தில் பழங்கள் நல்ல விளைச்சலை தந்திருந்தது போலும். அதற்காகதான் தோட்டத்து மாம்பழங்களை கூடையில் எடுத்து வந்து, ஜெ.வுக்கு வினோதமான முறையில் படையல் வைத்துவிட்டு போனார்.

    English summary
    Actress and AIADMK's Star Speaker Vindhiya tribute in Jayalalitha Samadhi with mangoes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X