சென்னையே மீன்பிடி கிராமம்.. CSK, கபாலீஷ்வரர் கோயில் மட்டும் அடையாளமில்ல - நடிகை வினோதினி உருக்கம்
சென்னை: மெரினா கடற்கரை அருகே லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றும் பணிகளுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் சென்னையின் அடையாளமே மீனவர்கள்தான் என்று குறிப்பிட்டு, மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை வினோதினி உருக்கமான பதிவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் நடிகை வினோதினி, "நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சில மாதங்களுக்கு முன் இடிக்க ஆரம்பித்தார்கள். இடிக்கப்போகிறோமென்று 4-5 வருடங்களாக சொல்லி வந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் கொரோனாவாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை காலி செய்வதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

இப்பொழுதும் பலர் வீட்டு வாடகைக்கும் முன் தொகைக்கும் பணமில்லாமல் கந்துவட்டியில் சிக்கித் தவிக்கின்றனர். அங்கு குடியிருந்த எனக்கு மிகவும் பரிச்சயமான பாய் அம்மா (தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்), நீலமேகம் (காய்லாங்கடை அண்ணன்), சுமதி (வீட்டு வேலை செய்யும் அம்மா), லதா (பூக்கட்டுபவர்) என்று 1000 குடும்பங்களுக்கு மேல் வேறு இடங்களுக்கு புகலிடம் தேடிச்சென்று அடிப்படை வாழ்வாதாரத்தைத் தொலைத்து எப்படியோ வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
நொச்சிக்குப்பத்து ஆட்களைப் பார்க்கும் பொழுது எனக்கு இவர்கள்தான் நினைவுக்கு வருகின்றனர். அது என்ன மெரினாவை அழகுபடுத்துவது? Aesthetics vs Livelihood, அதாவது, அழகியலுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நடுவில் தேர்வு வந்தால், வாழ்வாதாரத்துக்கு தானே முக்கியத்துவம் தர வேண்டும்? சென்னை மாநகரம் என்பதற்கு முன் ஒரு மீன்பிடி கிராமம் தானே? முதலில் இங்கு என்ன இருந்தது?
19 ஆம் நூற்றாண்டில் ஹார்பர் வந்ததால் பல மீனவ சமூகங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். அதன் பிறகு 1980 களில் மீனவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டும் சுடப்பட்டும் தங்களுடைய இடத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்பொழுது இந்த அழகுபடுத்தும் பணி. இப்பொழுது கடைகள் போட்டிருக்கும் மீனவர்கள் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் மீன் மார்க்கெட்டில் உரிமத்தோடு மீன் விற்கலாம்தான்.
ஆனால் 1500 ஸ்டால்கள் இருந்த இடத்தில் 900 ஸ்டால்களுக்குதான் உரிமம் தரப்படப்போகிறதாம். அதிலும் 40% புதிய தொழில்முனைவோருக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன. மற்றவர்கள் எங்கே செல்வார்கள்? எப்போதிலிருந்து இது நடக்கப்போகிறது? லூப் சாலையில் டிராபிக் பிரச்சினை ஏற்படுவதால்தான் இந்த அழகுபடுத்தும் நடவடிக்கையென்றால் இதற்கு மாற்று தீர்வாக ஒரு பெரிய மேம்பாலம் அமைக்க முடியாதா?
நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள Housing boardஐ சில மாதங்களுக்கு முன் இடிக்க ஆரம்பித்தார்கள். இடிக்கப்போகிறோமென்று 4-5 வருடங்களாக சொல்லிவந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் கொரொனாவாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை காலிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இப்பொழுதும் பலர்… pic.twitter.com/0eCHZntZTb
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) April 13, 2023
மேம்பாலத்திற்குக் கீழ் இயற்கையான மீன் மார்க்கெட், மேலே வாகனங்கள் நிம்மதியாக செல்லலாம். வின்செண்ட் டி சவுசா சொல்வதோடு சேர்த்து, சென்னை என்றால் CSK, பில்டர் காபி, கபாலீஷ்வரர் கோயில் மட்டுமல்ல. நொச்சிக்குப்பமும், நடுக்குப்பமும், மீனவர்களும் மீன்வாடையும் கூட. மேல் கூரியவற்றைவிட பின் சொன்னதுதான் சென்னையின் முதல் அடையாளமாகவும் இருந்தது. என் வீட்டுப் பூனைகளுக்கு இதே மீன் கடைகளில் மீன் வாங்கிவிட்டு மெரீனாவில் காற்றுவாங்கிய ஒரு மாலைப்பொழுது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications