தமிழகத்தில் 42000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்! எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும்? முழு டேட்டா
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாட்டில் அதானி குழுமம் மொத்தம் ரூ.42,768 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
நாட்டிலேயே முதலீட்டாளர்களை அதிகம் கவரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. இதனால், தமிழ்நாட்டின் ஜிடிபி இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தவும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உலக முதலீட்டாளர் மாநாடு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேலும், இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முதலீட்டாளர்களை வரவேற்று பேசினார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஜப்பான், என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளிலேயே ரூ. 5.5 லட்சம் கோடி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளதாக தொழில் துறை செயலாளர் அருண் ராய்ட் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் என்பதை இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த நிலையில், இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் அதானி குழுமம் மொத்தம் ரூ.42,768 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 10,300 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.24,500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல் அதானியின் அம்புஜா சிமெண்ட் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் அதானி கனெக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ13,200 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,568 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து - என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் தம்பி டி.ஆர்.பி ராஜா.
தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை பாராட்டுகிறேன். இவ்விழாவில் கண்ணும் கருத்துமாய் இருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டையும். நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது.
நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு. 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். அதோடு, நான் தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன். அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 44 27 தொழிற்சாலைகள திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications