பெண்களுடன் இணைத்து மைத்துனர் பேச்சு.. விஜய்யிடம் இருந்து சற்றும் எதிர்பாராத பதில்.. புலம்பும் ஆதவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா மீது பெண்களுடன் தொடர்பு உள்ளதாக தனிநபர் விமர்சனத்தை , அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வைத்திருக்கிறார். இதனால் கொதித்து போயிருக்கும் ஆதவ் அர்ஜுனா, அவர் மீது வழக்கு போடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விஜய்யிடம் ஆதவ் முறையிட்ட போது,இது உங்கள் பெர்சனல் விவகாரம் நீங்களே முடிவெடுங்கள் என்று கூறிவிட்டாராம். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ஆதவ் அர்ஜுனா தனது வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பினரிடம் புலம்பினாராம்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தாலும், விஜய்யை கடுமையாக விமர்சிப்பதில் தவறுவது இல்லை.. எல்லாரும் விஜய்யை டார்க்கெட் செய்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

Adhav Arjuna complained to Vijay regarding his brother-in-law who had been seen conversing with women

ஆனால் தவெகவில் விஜய்க்கு அடுத்தபடியாக விமர்சிக்கப்படும் நபராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அதுவும் சொந்த மைத்துனரால் தான் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா திமுகவைவிட, அதிமுகவைவிட அவரது மைத்துனரால் தான் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆதவ்வின் மைத்துனர் பேச்சு தான் இப்போது தவெகவில் பெரும் விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னை வில்லிவாக்கம் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், "ஆதவ் போல் ஒரு மொள்ளமாரியை அம்மாவாசையை யாருமே பார்க்க முடியாது. அமைதிப்படை வரும் போது எனக்கு சிறுவயது. நான் ரசித்துள்ளேன்... ஆனால் இன்றைக்கு உண்மையான அமைதிப்படை சத்யராஜ் ஆக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா.. அமைதிப்படையில் நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ தான் ஆதவ் அர்ஜுனா.. அவர் வாயை திறந்தால் பொய், சொந்த தாய் உள்பட அனைத்திலுமே அரசியல் பண்ணக்கூடிய தீயசக்தி நபர். தவெகவை அழிக்க வந்த திமுகவின் பிடீம்" என்று கூறினார்.

அதேபோல் ஆதவ் அர்ஜுனா மீது, அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக, "திருமண உறவை கடந்து எனது மச்சான் ஆதவ் அர்ஜுனா பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். பல பெண்களுக்கு பரிசாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார். குடும்பத்தை ஒழுங்காக பார்க்க துப்பு இல்லாத மனிதர் அவர்" என்று தனிநபர் விமர்சனங்களை சொல்லியிருக்கிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இந்த குற்றச்சாட்டு த.வெ.க. தரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மச்சானின் இந்த குற்றச்சாட்டால் கடும் கோபத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அவர் மீது வழக்கு தொடர ஆலோசித்திருக்கிறார் . அதேசமயம், தவெக கட்சியின் தலைவர் விஜய்யை தொடர்பு கொண்டு, வழக்குப் போடுவது குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது விஜய், "இது உங்கள் பெர்சனல் விவகாரம். இதில் நான் என்ன யோசனை சொல்ல முடியும்? நீங்க தான் முடிவெடுக்கணும். எது சரி என நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள் " என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறாராம் விஜய்.

இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ஆதவ் அர்ஜுனா, "தலைவருங்கிற முறையில் யோசனைக் கேட்டேன். 'உங்க விருப்பம், என்கிட்டே ஏன் கேட்கிறீங்க'ன்னு என் மீது அக்கறையே இல்லாத மாதிரி சொல்றாரே என புலம்புகிறார் " என்கிறார்கள் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+