Apology: நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில் அமைதியாக இருந்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஹீரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன். தான் மவுனமாக இருந்தது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ஆதித்யா மாதவன், 96 புகழ் நடிகை கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஸ்காந்த், ஹரீஷ் பெராடி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் அதர்ஸ்! இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது.

Gouri Kishan Hero

இந்த படத்தின் புரமோஷன் விழா அண்மையில் நடந்தது. அதில் ஒரு யூடியூபர், ஆதித்யா மாதவனிடம், கவுரி கிஷனின் எடை குறித்து கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவுரி கிஷனை, ஆதித்யா மாதவன் தூக்குவது போன்று காட்சி அமைந்திருக்கிறது. இந்த காட்சியை குறிப்பிட்டு பேசிய அந்த யூடியூபர், ஹீரோயினை தூக்கினீர்களே அவரது எடை என்ன என்று தெரியுமா? உங்களுக்கு தூக்கும்போது கஷ்டமாக இல்லையா என கேட்டாராம்.

அதற்கு ஹீரோ ஆதித்யா மாதவன், இல்லை அப்படி ஒன்றும் தெரியவில்லை. நான் ஜிம்முக்கு செல்வதால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என கூறினாராம். இந்த நிலையில் மீண்டும் இந்த விழாவில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த யூடியூபருடன் கவுரி கிஷன் வாக்குவாதம் செய்தார்.

"எனது எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள், நான் எத்தனை கிலோவாக இருந்தால் அது உங்களுக்கு என்ன? என் எடையை எதற்காக ஹீரோவிடம் கேட்கிறீர்கள். இது பாடி ஷேமிங்தான்" என அந்த யூடியூபரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார்.

கிஷனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. அந்த வகையில் 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை.

ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை.

மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும்." எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

நிறைய பேர் ஹீரோ, இயக்குநரை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் அதர்ஸ் படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஹீரோ ஆதித்யா மாதவன் கூறுகையில், "ஒரு தனிநபர் தவறான கேள்வியைக் கேட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்.

நான் என்னதான் அமைதியாக இருந்தாலும் எனது ஆதரவு எப்போதும் கவுரி கிஷனுக்குத்தான். நான் இந்த ஊடகங்கள் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஏற்கெனவே கவுரியிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அந்த நேரத்தில் நான் அமைதியாக இருந்திருக்கக் கூடாது.

அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அந்த விவாதத்தின் போது அவர்களுக்கு மத்தியில் குறுக்கிட்டு பேச வேண்டாம். கவுரியின் கருத்தை அவர் தெளிவாக கூற இடமளிக்க வேண்டும் என கருதிதான் அமைதியாக இருந்தேன். எனக்கு பேச எந்த பயமும் இல்லை.

நான் எப்போதும் கவுரியுடனே உறுதியாக நிற்கிறேன். இதுதான் என் முதல் படம் என்பதால் மீடியாவை சந்திக்கும் போதும் கேள்விகளை எதிர்கொள்ளும் போதும் கொஞ்சம் பதற்றம் இருந்தது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் லட்சக்கணக்கான மக்களிடம் போய் சேருகிறது என்பதால் நான் என்ன பேசுகிறேன் என்பதில் கவனம் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

அது போல் இயக்குநர் அபின் ஹரிஹரன் கூறுகையில், "அன்றைய சூழலில் அது படத்துக்கான பிரஸ் மீட் என்றுதான் நான் கருதினேன். அதனால் அமைதியாக இருந்தேன். அதற்காக என் தரப்பிலிருந்து நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்று நடந்த விஷயத்தை நான் தவிர்த்திருக்க வேண்டும். கவுரிக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். எனக்கும் இது போன்ற பிரஸ்மீட் எல்லாம் புதிது. கவுரி பேசும் போது அந்த நபர் பேசவே விடவில்லை, அப்போது நானும் உள்ளே நுழைந்து பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடுமோ என பயந்தேன். அதனால்தான் அமைதியாக இருந்தேன்.

என்னை நம்பி பிரஸ் மீட்டிற்கு வந்திருந்த கவுரி கிஷனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இந்த சூழலை என்னால் கையாள முடியவில்லை என்பதை நினைக்கும் போது நெருடலாக இருக்கிறது. இனி இது போன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்வேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+