Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 லட்டு திமுகவுக்கு.. கழட்டிவிடப்பட்ட பாஜக.. சிங்கிள் அதிமுக.. மொத்தமாக வாரி சுருட்டும் கட்சி "இது"

பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாற்றிலேயே முதல்முறையாக பாஜக ஒரு தில்லான முடிவை எடுத்துள்ளது. தமிழக தேர்தலில் தனித்து களமிறங்க போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது..!

மற்ற தேர்தல்களை போலவேதான் இந்த முறையும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் கறார் காட்டியது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் 70 சீட் வந்தாகணும், நாங்க தனித்து நின்றாலே 60 சீட்களில் வெற்றி பெறுவோம், கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றும் பேட்டி தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், அதிமுகவை தவிர்த்து விட்டு, பாஜகவால் தனித்து களம் காண முடியவில்லை.. இந்த முறை 4 சீட் வெற்றி பெற்றதற்கு காரணமே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் என்பதை பெரும்பாலானோர் மறுக்க முடியாது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.. வழக்கம்போலவே இத்தனை இடங்கள், இன்னின்ன இடங்கள் வேண்டும் என்று லிஸ்ட் போட்டு தந்தது.. இந்த சமயத்தில்தான் நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுக மேலிடத்தை எரிச்சல் கிளப்பியது.. இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும், அந்த கோபம் அதிமுகவுக்கு இருக்கவே செய்கிறது.. அதேசமயம் 3வது முறையாக அதிமுக பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு விவகாரத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

 தனித்து போட்டி

தனித்து போட்டி

வழக்கம்போல் இழுபறியே நீடித்த நிலையில், பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.. இதன்மூலம் 10 வருட கூட்டணி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.. ஜெ.இறந்தபிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக.. எம்பி தேர்தல், இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் ஒன்றுசேர்ந்து போட்டியிட்டது.. இந்த முறை பாஜக சீட் விவகாரத்தில் கறார்தன்மை என்ன காரணம் என்று சில அரசியல் நோக்கர்களை தொடர்பு கொண்டு கேட்டோம்.

 நயினார் பேச்சு

நயினார் பேச்சு

அதற்கு அவர்கள், "நயினார் பேசியது ஒரு விஷயமே இல்லை என்று அண்ணாமலை காரணம் சொன்னாலும், இன்றைய கூட்டணி முறிவுக்கு அதுதான் காரணமாக இருக்க முடியும்.. நயினாரின் பேச்சினை மேல்மட்ட தலைவர்கள் பாஜகவுக்காக பொறுத்து கொண்டாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டனின் ஆவேசத்தை அவர்களால் அடக்க முடியவில்லை.. அதனால், இனி எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கடந்த வாரமே முடிவு செய்து விட்டார்கள்.

 நேர்காணல்

நேர்காணல்

இருந்தாலும், தாங்கள் கொடுக்கும் சீட்களை பாஜக பெற்று கொள்ளட்டும் என்றுதான் அதிமுக நினைத்தது.. ஆனால், பாஜக தன் பிடிவாதத்தை மாற்றி கொள்ளவில்லை.. அதனால் தான் எந்த நேர்காணலும் வைக்காமல், மாவட்ட செயலாளர்கள் அனுப்பிய லிஸ்ட்டை வைத்து தர்மபுரி, திட்டக்குடி, சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், விருத்தாச்சலம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளின் வார்டு வேட்பாளர்கள் லிஸ்ட்டை அதிமுக முன்கூட்டியே அதிரடியாக வெளியிட்டுவிட்டது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இது பாஜகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. அதிமுகவின் இந்த மூவ்வை பார்த்துதான், பாஜக தனித்து போட்டியிடலாமா என்று தன் வியூகத்தை மாற்றியது. 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவுக்கு கூடுதல் நம்பிக்கை வந்துள்ளது.. தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டாலும் அதிக இடங்களை வெல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாக பாஜக தலைவர்களே சொல்லி வருகிறார்கள்.. அதிலும் சீனியர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இதை பலமுறை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.. பாஜகவின் தைரியத்துக்கு இதுவும் ஒரு காரணம்" என்றனர்.

 தனித்து போட்டி

தனித்து போட்டி

முதல்முறையாக பாஜக தனித்து களமிறங்கி உள்ளது அரசியல் வட்டாரத்திலேயே பரபரப்புடன் கவனிக்கப்பட்டு வருகிறது.. காரணம், திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை பாஜக நன்கு அறிந்துள்ளது என்றாலும் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதற்கு காரணம் சூழலா? தன்மானமா? அதிமுகவின் நிராகரிப்பா? என்று தெரியவில்லை.. ஆனால், இப்படி தனித்து போட்டியிட அறிவித்ததே துணிச்சலான முடிவு என்கிறார்கள்..

கமல்

கமல்

அதுமட்டுமல்ல, இப்படி தனித்து போட்டியிட்டால்தான், தன்னுடைய கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை அக்கட்சியால் சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்.. கமல் கட்சி ஆரம்பித்ததும், முதல்முதலாக தேர்தலில் தனித்துதான் நின்றார். அதற்கு அவர் சொன்ன காரணம், "சுயபரிசோதனை"தான்.. பாஜகவை பொறுத்தவரை கோவை பகுதியில் மட்டுமே தற்போது செல்வாக்கை பெற்றுவரும் நிலையில், அதிமுகவுக்கு நிகரான வாக்கு சதவீதத்தை பெறுவது கடினம் என்றே சொல்கிறார்கள்..

 வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

அதிமுக மீதே ஒருவித அதிருப்தி பரவலாக மக்களிடம் நிலவி வரும் சூழலில், அக்கட்சிக்கு முந்தைய வாக்கு சதவீதம்கூட கிடைக்காது என்கிறார்கள்.. கடந்த சட்டமன்ற தேர்தலிலாவது, அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது.. பாஜக இருந்தது.. எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு செய்த திட்டங்கள் சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தது.. அப்படி இருந்தும் மண்ணை கவ்வ நேர்ந்தது.. விஜயகாந்த்தையும், டிடிவி தினகரனையும் சமாதானப்படுத்தி உள்ளே கூட்டணிக்கு கொண்டு வந்திருந்தால், நிச்சயம் அதிமுக தோற்காது என்றார்கள்.. இத்தனைக்கும் விஜயகாந்த்தும், தினகரனும் அதிமுகவுடன் சேர தயாராகவே இருந்தனர்.. ஆனால், பலமான கூட்டணி எடப்பாடி முன்னெடுக்காததால் சறுக்கலை சந்திக்க நேர்ந்தது..

 திமுகவுக்கு பலம்

திமுகவுக்கு பலம்

இப்போது இன்னும் நிலைமை மோசம்.. இந்த முறை பாஜகவும் இல்லை.. பாமகவும் இல்லை.. அதிமுகவும் பலவீனப்பட்டுவிட்டது.. ஆக மொத்தம் இந்த பலவீனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திமுகவுக்குத்தான் சாதகமாக மாறும் என்கிறார்கள்.. முதல்முறையாக அதிமுக கூட்டணியே மொத்தமாக உடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணி பலமாக உள்ளது.. ஆட்சியும் சிறப்பாக உள்ளது.. இந்த இரண்டு விஷயங்களை வைத்து பார்க்கும்போது, இப்போதைக்கு திமுகவுக்கான சாதகமான சூழல் நிலவுவதாக தெரிகிறது.. இனி அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+