பழிவாங்குறீங்களா? தி.நகர் சத்யா வீடு முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.. போலீசாருடன் வாக்குவாதம்!
சென்னை: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. நகர் சத்யா வீடு, பண்ணை வீடு உட்பட மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.நகர் சத்யா வீடு முன்பு அதிமுகவினர் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி காலகட்டத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சத்தியநாராயணன். தி.நகர் சத்யா என்று அழைக்கப்படும் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து, தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருமானத்துக்கு அதிமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ, தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.நகரில் உள்ள சத்யாவின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, நெற்குன்த்திலும், உள்பட 16 இடங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு, கோவையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவி ஜெயசித்ரா, மகள் கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016ல், ரூ. 3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ரூ. 16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை 6.30 மணி முதல் தி.நகர் மற்றும் வடபழனியில் உள்ள சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தி.நகரில் உள்ள சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், வீட்டின் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யாவை பழிவாங்க ரெய்டு நடத்துகிறதா எனக் கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் கூச்சல் போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications