தஞ்சை சுற்றுப்பயணத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! என்ன பின்னணி?
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிற்கு நாளை மறுநாள் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் திருப்பமாக தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.
வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநட்டிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவிருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''எடப்பாடி K. பழனிசாமி 4.5.2023 அன்று, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும்; அதனைத் தொடர்ந்து, பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்பதாக இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு, 15.5.2023 திங்கட் கிழமை அன்று, கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கவிருக்கிறார்.
கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.'' இதனிடையே என்னதான் மழையை காரணமாக கூறினாலும், உள்ளே வேறு சில முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்ற முணுமுணுப்பும் அதிமுக தரப்பில் கேட்கிறது.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications