Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளானே வேற..! சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை ஓபிஎஸ் அழைக்க என்ன காரணம் தெரியுமா? மனோஜ் பாண்டியன் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒண்டிவீரன் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்துப் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

    Sasikala, Dinakaran இணைய வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம் - Manoj Pandian *Politics

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல போர்களைத் தொடுத்து துணிச்சலாகப் போராடியவர் மாமன்னர் பூலித்தேவன். இவரது படைகளில் இருந்த முதன்மை படைத்தலைவர் மாவீரன் ஒண்டி வீரன்.

    பிரிட்டஷாரை எதிர்த்து விடுதலைக்குப் போராடியவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான ஒண்டிவீரனின் 251ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

     மனோஜ் பாண்டியன்

    மனோஜ் பாண்டியன்

    இதையொட்டி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அமைச்சர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதன்படி அதிமுக ஆலங்குளம் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்


    செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், "கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். ஓபிஎஸ் வரும் செப். 1ஆம் தேதி தென்காசிக்கு வர உள்ளார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பது அதில் தெரிய வரும்.

     அடுத்தகட்ட நடவடிக்கை

    அடுத்தகட்ட நடவடிக்கை

    இப்போது சட்ட போராட்டத்தில் ஓபிஎஸ் வெற்றி பெற்று உள்ளார். அடுத்ததாக மக்கள் மன்றத்திலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். சட்டப் போராட்டம் என்பது முதல் படி! அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பொறுத்திருந்து பாருங்கள். மிக விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். உண்மையான அதிமுகவும் உண்மையான தொண்டர்களும் ஓபிஎஸ் தலைமையில் தான் இருக்கிறது.

     கட்சி நலன்

    கட்சி நலன்

    ஓபிஎஸ் அழைப்பை எதிரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரியும். இருந்த போதிலும், கட்சியின் உண்மையான தொண்டர்களின் நலனை மட்டுமே கருதி ஓபிஎஸ் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருகிறார். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்ட உண்மையான அதிமுக தொண்டர்கள் இப்போது ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

     சசிகலா & டிடிவி

    சசிகலா & டிடிவி

    தொண்டர்களின் நலனுக்காகவே ஒவ்வொரு நகர்வையும் ஓ பன்னீர்செல்வம் எடுப்பார். அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே குடையின் கீழ் அதிமுக இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸின் விருப்பம். இதன் காரணமாகவே அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்து இருந்தார். சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் இருவரையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தி உள்ளார்" என்று தெரிவித்தார்.

    அதிமுக

    அதிமுக

    எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாகவும் இதனால் ஓபிஎஸுக்கு கட்சிக்குள் ஆதரவு சுருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடிக்குப் போட்டி கொடுக்கும் வகையில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அதை மறுக்கும் வகையில் பேசியுள்ள மனோஜ் பாண்டியன், அதுதான் தொண்டர்களின் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     நீதிமன்ற தீர்ப்பு

    நீதிமன்ற தீர்ப்பு

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அதிமுக பொதுக்குழு குறித்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி இருந்தது. அதில் ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டம் செல்லாது என்றும் அதிமுகவில் ஜூலை 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், திமுகவை வீழ்த்த எடப்பாடி, சசிகலா, டிடிவி. தினகரன் என அனைவரும் மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+