21 ஆண்டுக்கு பின்.. அதுவும் ‛கிறிஸ்துமஸ்’ நாளில்.. வடதமிழகத்துக்கு நல்ல மெசேஜ் சொன்ன வெதர்மேன்! ஆஹா
சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை துவங்கி கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 21 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் தினத்தில் வடதமிழகத்தில் மழை தொடர்பாக நல்ல விஷயம் நடந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க சென்னையில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பல இடங்களில் விட்டு விட்டு பரவலாக நல்ல மழை பெய்தது.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தமட்டில் நேற்று சைதாப்பேட்டை, அடையாறு, பிராட்வே, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், பெரம்பூர், கிண்டி, ஆலந்தூர், மெரினா கடற்கரை, தி நகர், ராயப்பேட்டை, விமான நிலையம், ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் அண்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது.

இன்று எங்கெங்கு மழை?
இந்த மழையின் காரணமாக நேற்று சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதோடு சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டடத்துக்கு புறப்பட்ட மக்கள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது. சில பாதிவழியில் வீடு திரும்பினர். இந்நிலையில் தான் கிறிஸ்துமஸ் தினமான இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்ய உள்ளது. குறிப்பாக டெல்டா, தென்தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

21 ஆண்டுக்கு பிறகு...
இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: ‛‛டிசம்பர் 25 காலை 4 மணிக்கு 945 மில்லிமீட்டர் மழைக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டது. தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் கேடிசிசி(காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) பெல்ட் ஆகியவற்றில் இன்று விட்டுவிட்டு அதிகளவில் மழை பெய்ய உள்ளது. 2001ம் ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வடதமிழகத்தில் மழை பெய்ததை நாம் பார்த்தோம். அதன்பிறகு 2003ல் மழை பெய்தாலும் அது சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால் இன்று மழை பெய்து வருகிறது.

வட தமிழக மாவட்டங்களில் மழை
குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மநல்ல மழை பெய்ய உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த மாவட்டங்கள் மழையில் லீடிங்கில் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டமும் நல்ல மழையை பெய்துள்ளது. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது

சென்னை மழை அளவு
இன்று காலை 5 மணி நிலவரப்படி சென்னை பள்ளிக்கரணையில் 37 மில்லி மீட்டர், தண்டையார்பேட்டையில் 35 மில்லமிடீ்டர், ராயபுரம், தேனாம்பேட்டையில் தலா 30 மில்லிமீட்டர், ஐஸ்ஹவுசில் 29 மில்லி மீட்டர், நந்தனத்தில் 27 மில்லி மீட்டர், கோடம்பாக்கத்தில் 27 மில்லிமீட்டர், அமைந்தகரையில் 26 மில்லி மீட்டர், மதுரவாயலில் 25 மில்லி மீட்டர், முகலிவாக்கத்தில் 23 மில்லி மீட்டர், ரிப்பன் கட்டடத்தில் 22 மில்லி மீட்டர், பெரம்பூர், நுங்கம்பாக்கத்தில் தலா 21 மில்லி மீட்டர், பூந்தமல்லி, வளசரவாக்கம், கீளம்பாக்கத்தில் தலா 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications