சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

37 நாட்களுக்குப் பின்னர் ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவில் இருந்து விடுபட்ட ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொடக்கத்தில் மதுரை, ஈரோடு மாவட்டங்களில்தான் பரவியது. குறிப்பாக ஈரோட்டில் அடுத்தடுத்து பலருக்கும் கொரோனா உறுதியானது.

Recommended Video

    புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று: அச்சத்தில் மக்கள்!
    After 37 days Erode reports one fresh Coronavirus Positive

    இதனால் சீனாவின் வூகான் போல தமிழகத்தின் வூகானாக ஈரோடு விஸ்வரூபமெடுக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டது. பின்னர் கொரோனா பரவலாக பல்வேறு மாவட்டங்களுக்கும் பர வியது.

    தற்போது சென்னையில்தான் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உள்ளது. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் படிப்படியாக குணமடைந்தனர். ஒருகட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகவே ஈரோடு மாறியது.

    ஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்ஆம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரழிவு என பிரகடனப்படுத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

    இந்த நிலையில் 37 நாட்களுக்குப் பின்னர் இன்று ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    English summary
    After 37 days, Erode has reported a fresh Coronavirus positive case on Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X