5 மாநில தேர்தலுக்கு பின் வெறும் 35 நாட்களில்.. 21 முறை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. விரிவான தகவல்
சென்னை: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஒரே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 21 முறை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவான தகவலை பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் மாற்றங்கள் என்பது அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை கிட்டதட்ட அனைத்து பொருட்களின் விலையின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவது நாட்டில் உள்ள நடுத்தர வர்க்கம் தான். இதனால் தேர்தல் காலகட்டத்தில் இதில் அரசு மிகக் கவனமாக இருக்கும்.

தேர்தல் காலங்கள்
கடந்த காலங்களில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களின் சமயங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது இல்லை. எப்போதெல்லாம் நாட்டில் தேர்தல்கள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இல்லை என்பது அறிவிக்கப்படாத விதியாகவே தொடர்கிறது. அதற்குச் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்கள் மட்டும் விதிவிலக்கு இல்லை.

2019ஆண் ஆண்டு
பொதுவாகவே உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டால் அதற்கு சொல்லும் காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு. கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழாக சென்றது. ஆனால், அப்போது பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்படவில்லை.

மக்கள் அதிருப்தி
பல மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமலேயே தொடர்ந்தன. கொரோனா குறைந்ததைத் தொடர்ந்து பல நாடுகளும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியதால், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. அப்போது பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, விலையைக் குறைக்காமல், ஏறும்போது மட்டும் விலையை உயர்த்துவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சதமடித்த பெட்ரோல் விலை
இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தின. இதனால் பிப்ரவரி மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பல மாநிலங்களில் 100 ரூபாயைத் தாண்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியது. இது நாட்டிலுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது.

மார்ச், ஏப்ரல் மாதங்கள்
அப்போது, பிப்ரவரி இறுதியில் 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. தேர்தல் நடைபெற்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்தது. இருப்பினும், தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. மாறாக ஒரு சில முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டன.

மே மாதத்தில் 16 முறை உயர்வு
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இது அப்படியே நேர்மாறாக மாறியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மே மாதம் மட்டும் 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன. அதாவது ஒரே மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.83 ரூபாய் வரையிலும், டீசல் 4.42 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டன. ஜூன் மாதத்திலாவது பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் மாத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் 4 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

35 நாட்களில் 20 முறை உயர்வு
அதாவது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 35 நாட்களில் குறைந்தபட்சம் 20 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முறை கூட குறைக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலை 5 ரூபாய் வரையிலும், டீசல் விலை 6 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா என நாட்டிலுள்ள குறைந்தபட்சம் 135 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

21ஆவது முறையாக உயர்ந்த பெட்ரோல் விலை
ஜூன் மாதத்தில் ஏழாவது முறையாக இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 பைசா ஏற்றம் கண்டு 95.31 ரூபாய்க்கும் டீசல் விலை 27 பைசா உயர்ந்து 86.22 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மும்பையில் பெட்ரோல் 101.57 ரூபாய்க்கும், டீசல் 93.64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் பெட்ரோல், டீசல் முறையே 96.77 ரூபாய்க்கும், 90.97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications