பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி... இன்னும் சீட்டை குறைச்சுடுமோ திமுக? பீதியில் காங்கிரஸ்
சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியிலும் எதிரொலிக்கும் நிலை இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து காங்கிரஸூக்கு மிக சொற்பமான தொகுதிகளை திமுக ஒதுக்கினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்- இடதுசாரிகள்-விசிக உள்ளன.
கிட்டத்தட்ட பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் போன்ற கூட்டணிதான் தமிழகத்திலும் உள்ளது. தற்போது பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த இடங்களைப் பெற முடியவில்லை.

20 இடம்தான்
எப்படியும் 50 இடங்களில் வெல்வோம் என மார்தட்டிய காங்கிரஸ் கட்சியால் 20 இடங்களைக் கூட தாண்ட முடியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு தனியே ஆர்ஜேடி நின்றிருந்தால் கூட இன்னமும் கூடுதல் இடங்களை அந்த கட்சி பெற்றிருக்கும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இடதுசாரிகள் அமோகம்
இத்தனைக்கும் ஆர்ஜேடி கூட்டணியில் 19 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம்எல் கட்சியானது 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஒட்டுமொத்த கூட்டணிக்கே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் எதிரொலிக்கும்?
பீகார் தேர்தல் முடிவுகளானது தமிழகத்திலும் அனேகமாக எதிரொலிக்கவே வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் அதிகமான இடங்களை காங்கிரஸ் பெற்று அந்த இடங்களில் பெரும்பாலானவற்றில் தோல்வியைத் தழுவுவது அந்த கட்சியின் வாடிக்கை. இதனால் திமுகவின் ஆட்சி கனவு தகர்ந்து கொண்டே இருக்கிறது.

காங். இடங்கள் குறையும்?
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் கணிசமான இடங்களை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் நிச்சயம் கடந்த காலங்களைப் போல திமுக ஒதுக்காது என கூறப்பட்டது. இப்போது பீகார் நிலவரத்தை முன்வைத்து திமுக கொடுக்கலாம் என நினைத்த 15 முதல் 20 சீட்டுகளுக்கும் பங்கம் வந்துவிடுமோ என்கிற பீதி காங்கிரஸுக்கு ஏற்பட்டிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications