புதிதாக பரவும் மஞ்சள் பூஞ்சை நோய்.. கருப்பு, வெள்ளை பங்கஸை விட ஆபத்தானது.. அறிகுறிகள் என்ன?
சென்னை: நாடு முழுக்க கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக மஞ்சள் பூஞ்சை என்ற ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தில் நோயாளி ஒருவர் மஞ்சள் பூஞ்சை அதாவது YellowFungus நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர் பிரிஜ் பால் தியாகி தலைமையிலான மருத்துவர் குழு அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

ஆபத்தானது
கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை ஆகியவற்றை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவத் துறையினர். ஏனெனில், உடலில் ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டால் அது சரியாகி குணம் அடைவதற்கு மிகவும் காலம் பிடிக்கும் என்ற மோசமான நிலைக்கு மஞ்சள் பூஞ்சை, நோயாளிகளை தள்ளி விடும் என்கிறார்கள்.

சிகிச்சை என்ன?
உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது. எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பூஞ்சைக்கும் அம்போட்டெரிசின் பி, ஊசி செலுத்தி கொள்வது மட்டும்தான் தற்போதைய சிகிச்சை முறையாக இருக்கிறது. பிற பூஞ்சை நோய்களுக்கும் இந்த மருந்து ஊசியைதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்
மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகளாக, சோம்பல், பசி குறைவது அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு, நெக்ரோசிஸ் காரணமாக கண்கள் வீக்கம் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

காரணம் என்ன?
மோசமான சுகாதார சூழ்நிலை இருந்தால்தான் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவத் துறையினர். உங்களது வீடு மற்றும் நீங்கள் புழங்கக்கூடிய பகுதிகளை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்வது, இந்த பூஞ்சை நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.

கவனம் மக்களே
வீட்டில் பழைய உணவுகளை சேர்த்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கழிவறை உரிய வகையில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மலம் கழிவறையில் தேங்கி இருக்கக்கூடாது. சாப்பிடும் பொருட்களிலும், கழிவு பொருட்களிலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

ஈரப்பதம் கூடாது
வீட்டில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கக் கூடாது, நன்கு காய்ந்த நிலையில் வீட்டின் தரை மற்றும் சுவர் பராமரிக்கப்பட வேண்டும். இதற்கு சூரிய ஒளி வீட்டுக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும், நன்கு காற்றோட்டம் இருக்க வேண்டும், இரண்டுக்கும் வழி இல்லாவிட்டால் மின்விசிறி போன்றவற்றை இயக்கி அறையில் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications