ரோடு சரியில்லையே.. கண்கள் சிவந்த ஸ்டாலின்.. உடனே போடப்படும் சாலைகள்.. வடபழனிக்கு விடிவுகாலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் தொடர் புகார்களுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) சார்பாக போரூர் மற்றும் வடபழனி இடையே ஆற்காடு சாலையில் பள்ளங்கள் நிறைந்த பகுதிகளை சரி செய்ய தொடங்கி உள்ளனர். இங்கே புதிய சாலை போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

After CM Stalins anger, Chennai Metro Rail Limited began relaying roads in Arcot Road

இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு தமிழ்நாடு அரசு மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.

அதன்படி, சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாடு பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல.

மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நானும் இதனை ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பணிகள் தொடக்கம்: அதோடு சென்னை சாலையில் புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

வடகிழக்கு பருவமழை முடியும் வரை பணிகளை நிறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) சார்பாக போரூர் மற்றும் வடபழனி இடையே ஆற்காடு சாலையில் பள்ளங்கள் நிறைந்த பகுதிகளை சரி செய்ய தொடங்கி உள்ளனர். இங்கே புதிய சாலை போடப்பட்டு வருகிறது.

சிஎம்ஆர்எல் அதிகாரிகள் கூறுகையில், ஆற்காடு சாலையில் ரிலேயிங் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கி, அடுத்த 20 நாட்களில் முடிப்போம். போரூர் வரை பணிகள் நடக்கும். மக்கள் பிரச்சினையை அறிந்துள்ளோம், ஒப்பந்ததாரர் வேலையைத் தொடங்கி விட்டார். நாங்கள் பணியை கண்காணித்து வருகிறோம், தரத்திலும் எந்த சமரசமும் இல்லை என்பதை உறுதி செய்வோம். குழிகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் இயல்பு நிலைக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோல் மெட்ரோ பணிகள் காரணமாக சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்ற பகுதிகளிலும் சரி செய்யப்படும் என்று மெட்ரோ நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+