ஆன்மீக பயணம்... சிறப்பு சாமி தரிசனங்களுக்கு முன்னேற்பாடு.. கோவில் கோவிலாக விசாரிக்கும் சசிகலா உறவுகள்
சென்னை: அதிமுகவை எப்படியும் கைப்பற்றியே தீருவது என தீர்மானமாக இருக்கும் சசிகலா முதல் கட்டமாக ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றதால் தம்மை தேடி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வருவார்கள் என எதிர்பார்த்தார் சசிகலா. ஆனால் அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் உருவாகவில்லை.
இதற்கு பதிலாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம்; அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து போனில் பேசி வருகிறார் சசிகலா.

ஆடியோ அரசியல்
அத்துடன் தாம் பேசும் ஒவ்வொரு உரையாடலையும் பதிவு செய்து ஊடகங்களுக்கும் அனுப்பி வருகிறார் சசிகலா. அவரது இந்த ஆடியோ அரசியல் அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால் சசிகலாவுடன் போனில் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

கோவில்கள் திறப்பு
இது ஒருபுறமிருக்க, கொரோனா நெருக்கடிகள் குறைக்கப்பட்டு தளர்வுகள் கொடுக்கப்பட்டதில் கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி இல்லை. சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கிடைக்கும் போது சுற்றுப்பயணம் செல்லலாம் என சொல்லியிருக்கிறாராம் சசிகலா.

சிறப்பு பூஜைக்கான விசாரிப்பு
அதேசமயம், முக்கிய சில கோவில்களில் சிறப்பு பூஜை இல்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கிடைக்குமா ? என விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் உறவுகள் இதுகுறித்து, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகளிடம், குறிப்பிட்ட சில கோவில்களைச் சொல்லி அந்த கோவில்களில் தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமாறு கேட்டுள்ளனர்.

சுற்றுப்பயணம் எப்போது?
ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும், சசிகலாவுக்காக தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தால் ஒவ்வொரு அரசியல் வி.வி.ஐ.பி.க்களும் இதே கோரிக்கை வைப்பார்கள். அதனால் அப்படி அனுமதிக்க முடியாது. பொறுத்திருங்கள்...விரைவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும். அப்போது சிறப்பு பூஜைகளுக்கும் வாய்ப்புண்டு என கூறியுள்ளனர். இதனால்தான் சசிகலா இன்னமும் சுற்று பயணம் மேற்கொள்ளவில்லையாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications