எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு.. விஜய்யை தலைவராக ஏற்ற செங்கோட்டையன்.. பின்னணி
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதன்மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு செங்கோட்டையன் விஜயை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதிமுகவில் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.இதையடுத்து நேற்று செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதன்மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு செங்கோட்டையன் விஜயை தலைவராக ஏற்றுள்ளார். அதாவது செங்கோட்டையன் அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த கட்சியில் பயணம் செய்தவர். கடந்த 1977 ம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்றபோது முதல் முறையாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியமாக மாறினார். ஜெயலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். மேலும் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவின் பிரசார பயணங்களை வடிவமைத்து கொடுத்தார். ஜெயலலிதா அவ்வப்போது செங்கோட்டையன் மீது அதிருப்தியாகி பதவியை பறித்தாலும் கூட அவர் வேறு கட்சிக்கு செல்லவே இல்லை.
தொடர்ந்து ஜெயலலிதாவின் விசுவாசியமாகவே இருந்து வந்தார். அதேவேளையில் அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதல்வராக இருந்தாலும் கூட அவர்களை செங்கோட்டையன் தனது தலைவராக ஏற்றுக்கொண்டது இல்லை. ஆனால் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எம்எல்ஏவாக இருந்தபோது அவர் இருவருக்கும் எதிராகவும் போர்க்கொடி உயர்த்தியதால் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்.
இப்போது செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் மூலமாக எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு விஜயை அவர் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்











Click it and Unblock the Notifications