8 மணிநேரம் NIA என்ன விசாரித்தது? சீமானிடம் விலாவாரியாக ஒப்புவித்த சாட்டை துரைமுருகன் கோஷ்டி!
சென்னை: தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA, என்.ஐ.ஏ என்ஐஏ) அதிகாரிகள் தங்களிடம் 8 மணிநேரத்துக்கும் மேலாக என்னவெல்லாம் விசாரணை நடத்தியது என்பதை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் சீமானிடம் நேரில் விவரித்தனர்.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சிப்பவர்களுடன் நாம் தமிழர் கட்சியினருக்கு தொடர்பு என்பது என்.ஐ.ஏ. சந்தேகம். இதனடிப்படையில் கடந்த 2-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தங்களிடம் சிக்கிய சந்தேக நபர்களுக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்குமான தொடர்புகள் குறித்தும் இந்த சோதனையின் போது விசாரணைகளை நடத்தினர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். இச்சோதனைகளில் செல்போன்கள், லேப்டாகள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட பலரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்திருந்தனர். கடந்த 2 நாட்களாக இந்த விசாரணைகள் நடைபெற்றன.
என்.ஐ.ஏ. விசாரணை தமது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இடும்பாவனம் கார்த்தி, நேற்று நடைபெற்ற 8 மணி நேர NIA விசாரணையில் ஒரு நிமிடம்கூட நிதி தொடர்பாகக் கேள்வி கேட்கப்படவில்லை. ஒரு கேள்விகூட நிதி தொடர்பானது இல்லை. வழக்கும், விசாரணையும் நிதி தொடர்பானது இல்லை. நேற்று காலை 10.30 மணிக்கு உள்ளே சென்று, மாலை 6.15 க்கு வெளியே வந்துவிட்டோம். இன்னும் சொல்லப்போனால், விசாரணையில் எங்களில் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. சாட்சி எனும் அடிப்படையில் தெரிந்தவற்றை கூறவே சொன்னார்கள் என பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று சாட்டை துரைமுருகன் தலைமையில் இடும்பாவனம் கார்த்தி உட்பட என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சென்னையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னவெல்லாம் விசாரித்தார்கள்? கேட்ட கேள்விகள் என்ன? அதற்கு தாங்கள் கொடுத்த பதில் என்ன என்பதையெல்லாம் விவரித்தனர். சீமானுடனான சந்திப்பு படங்களை சாட்டை துரைமுருகன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications