அட.. இந்தி மாநிலத்துக்கும் வந்துட்டாரே! முதல்வர் ஸ்டாலினால் புலம்பும் பாஜகவினர்! அவரே சொன்ன ரகசியம்
சென்னை: தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடப்பார் என பார்த்தால் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் வந்துவிட்டாரே என என்னை பார்த்து பாஜகவினர் புலம்புகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் நடந்த உரையாடலில் கூறினார்.
திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது.

திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சமூக வலைதளங்கள் வாயிலாக நாம் அனைவரும் கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். கொள்கைகளை பரப்புவதற்கான வலைதளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், டெலிகிராம் உள்பட வெவ்வேறு தளங்களை பயன்படுத்த வேண்டும்.
நான் கூட ‛ஸ்பிக்கிங் பார் இந்தியா' என ‛ப்ரோட்காஸ்ட்' தொடங்கி இருக்கிறேன். இதில் 2 எபிசோட் முடிவடைந்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் இது வெளியாகி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு முடங்கி கிடப்பார் என பார்த்தால் இந்தி மாநிலங்களுக்கு வந்துவிட்டாரே என பாஜகவினர் புலம்புகிறார்கள்.
நாம் சேர்ந்து செயல்படுவோம். நாம் அப்டேட்டாகவும், அட்வான்ஸாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்தியாவுக்காக நாம் பேசுவதை ஒரே நேரத்தில் பல லட்சம் பேரால் கேட்க முடியும். இது 10 முதல் 14 மாநாட்டுக்கு சமம். இன்னும் சொல்லப்போனால் நம்மை எதிர்ப்பவர்கள் கூட கேட்கிறார்கள். மாநாட்டுக்கு கூட சொந்த கட்சியினர் தான் வருவார்கள். ஆனால் இது அப்படியில்லை. அதோடு நம் கொள்கைகளை கேட்டு வேறு கட்சியினர் மனம் மாறவும் வாய்ப்புண்டு'' என்றார்.
முன்னதாக இந்த உரையாடலின்போது ‛‛அதிமுகவுக்கு கொள்கை என்பதே இல்லை. பாஜகவை பொறுத்தவரை அனைவரும் பொய் சொல்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பலரும் நாடாளுமன்றத்தில் பொய்களை பேசி வருகின்றனர் நாம் அனைத்துக்கும் பதில் சொல்லி கொள்ள வேண்டி இருக்க முடியுமா. கள்ள கூட்டணியில் உள்ள கூட்டணியில் உள்ள பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு. நமது கொள்கைக்கு ஆயுள் அதிகம். இதனால் 6வது முறையாக ஆளும் வாய்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தால் 40ம் நமதே நாடு நமதே என்றாகி விடும்'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications