அம்மா அம்மா தான்.. ஜெயிலில் இருந்து வீடு திரும்பிய டிடிஎப் வாசன்.. வீட்டில் தாய் செய்த தரமான சம்பவம்
சென்னை: பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்ற தாய் அவருக்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் வெளிமாநிலங்களுக்கு ரைட் சென்று அதனை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பாலோ செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் அடிக்கடி டிடிஎப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறி சிக்கலில் சிக்கி கொள்வது உண்டு. அதிவேகமாக பைக் ஓட்டுவது உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் பதிவாகி உள்ளன. பல வழக்குகளில் அவர் அபராதம் செலுத்தி உள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த செப்டம்பர் மாதம் டிடிஎப் வாசன் விலையுயர்ந்த பைக்கில்காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பைக் பல்டி அடித்து சாலையோரம் விழுந்த நிலையில் டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்டார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே டிடிஎப் வாசன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகள் வரை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் டிடிஎப் வாசன் தொடர்ந்து ஜாமீன் கோரி வந்தார். காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து டிடிஎப் வாசன் வெளியே வந்தார். சுமார் 45 நாட்களுக்கு பிறகு அவர் விடுதலையானார்.

டிடிஎப் வாசனை அவரது தாயார், நண்பர்கள் வரவேற்றனர். அதன்பிறகு காரில் அவரை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீடு திரும்பிய டிடிஎப் வாசனை அவரது தாய் வரவேற்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது டிடிஎப் வாசன் வீடு திரும்பியபோது வீட்டுக்கு வெளியே அமர வைக்கப்பட்டார். இதையடுத்து அவரது தலையில் எண்ணெய் வைத்து தாய் குளிப்பாட்டினார். அதன்பிறகு இன்னொரு பெண் டிடிஎப் வாசனுக்கு ஆர்த்தி எடுத்து திலகமிட்டார். அதன்பிறகு டிடிஎப் வாசன் வீட்டுக்குள் சென்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications