பொங்கல் ரூ.3000 + உரிமை தொகை + பென்சன்.. சிக்ஸர் அடித்த ஸ்டாலின்! இன்னொரு பெரிய அறிவிப்பும் வருது
சென்னை: தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், TAPS பென்ஷன் திட்டம் என்று வரிசையாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொங்கல் பரிசு ரூ.3000 வழங்கி உள்ளனர்.
இனி அடுத்தடுத்தாக இன்னொரு பெரிய அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பெண்களை அடிப்படியாக வைத்து பெரிய அறிவிப்பு வரப்போவதாக கூறப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. இந்த நொடியில் தமிழ்நாட்டில் இரண்டு கோடி பேர் வரை இந்த திட்டம் மூலம் நேரடியாக நிதி பெறுகிறார்கள். முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. அதன்படி கூடுதல் மகளிருக்கு கடந்த டிசம்பரில் இருந்து பணம் அனுப்பப்பட்டு வருகிறது .
பென்சன் திட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காகப் புதிய உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மூவர் ஓய்வூதியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழு, பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கு ஏற்ற புதிய மாதிரித் திட்டத்தை பரிந்துரைத்திருந்தது.
TAPS திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10% ஓய்வூதிய நிதிக்கு செலுத்த வேண்டும். கூடுதல் நிதித் தேவையை மாநில அரசே ஏற்கும். இத்திட்டத்தால், ஓய்வூதிய நிதிக்கு ₹13,000 கோடி கூடுதல் செலவு அரசுக்கு உடனடியாக ஏற்படும்.
பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு உண்டு. ஒரு ஓய்வூதியதாரர் மரணமடைந்தால், அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகப் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கும். ஓய்வு அல்லது பணி மரணத்தின்போது, சேவை காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ₹25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
தகுதிச் சேவைக்காலம் நிறைவு செய்யாதவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) சேர்ந்து, TAPS அமலுக்கு முன்னர் ஓய்வூதியம் பெறாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு 'சிறப்பு கருணை ஓய்வூதியம்' உண்டு. மேலும், ஆண்டுதோறும் சுமார் ₹11,000 கோடி அரசு பங்களிக்க வேண்டும், இது ஊழியர்களின் ஊதியத்தைப் பொறுத்து அதிகரிக்கக்கூடும்.
பொங்கல் பரிசு
இது போக பொங்கல் பரிசு ரூ. 3000 அறிவிக்கப்பட்டது. இந்த பரிசும் வழங்கப்பட்டுவிட்டது. இனி அடுத்தடுத்தாக இன்னொரு பெரிய அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பெண்களை அடிப்படியாக வைத்து பெரிய அறிவிப்பு வரப்போவதாக கூறப்படுகிறது.
அதாவது தேர்தலை மனதில் வைத்து பெண்களை கவரும் விதமாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வரப்போவதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு பலன் அளிக்க கூடிய பெரிய திட்டம் ஒன்று பிப்ரவரி தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி கடைசி வாரம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மாதாந்திர இபி பில்
இனி அடுத்தடுத்தாக மாதாந்திர இபி பில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இந்த வருடம் நடக்க உள்ள நிலையில்.. அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் மாதாந்திர மின் கட்டணம் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பதால் அந்த சட்டம் அமலுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. எந்த சிக்கல்களும் இல்லாத பட்சத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கிடையில், மாதாந்திர மின் கட்டணம் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, மாதாந்திர கட்டணம் படிப்படியாக அமலாகும்.
தமிழக அரசு புதிய மின் இணைப்புகளுக்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது. வீடுகள், கடைகள் போன்ற தாழ்வழுத்த பிரிவில் விண்ணப்பத்தால், அதிகபட்சம் மூன்று நாட்களில் மின்சாரம் வழங்கப்படும். கூடுதல் மின் சாதனங்கள், சிறிய மின்மாற்றிகள் தேவையில்லையெனில் மூன்று நாட்களில் கிடைக்கும். இல்லையெனில், ஏழு நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் பிப்ரவரியில் வெளியாகி தற்போது நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மாதாந்திர மின் கட்டணம்
தமிழ்நாடு மின்சார வாரியம் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மீட்டர்களை நேரடியாக வாங்க முடியும். பொதுமக்கள் மின்வாரியத்திடம் காத்திருக்க வேண்டியதில்லை. மீட்டர் பற்றாக்குறையைத் தவிர்க்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து நுகர்வோரும் வாங்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மீட்டர் வாங்கினாலும், நுகர்வோர் டேம்பர்-ப்ரூஃப் சரிபார்ப்பிற்கு டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" அடிப்படையில் பொருத்துவார்கள். முன்பு டாங்கெட்கோ மொத்தமாக வாங்கி, சோதனை செய்து அனுப்பியது.
தற்போது, டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் மக்கள் நேரடியாக வாங்கலாம். இருப்பினும், ஈபி மீட்டர் தட்டுப்பாடு ஒரு சிக்கலாக உள்ளது. இது புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர்: இபி கட்டணம் முறை
மேல்நிலை கேபிள்கள் உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு அதிக மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இதற்கு நடவடிக்கை எடுத்தது. அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது.
வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் கணக்கில் திருப்பிச் செலுத்த ஆணையம் உத்தரவிட்டது. அதை அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்யவும் கூறியது. இதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் உடனடியாக திருத்தப்பட வேண்டும். தற்போதைய ஏற்பாடுகளுடன் மேம்பாட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படாது.
இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பித் தரப்பட வேண்டும். அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டது. மேல்நிலை கேபிள்களுக்கு குறைவான கட்டணமும், நிலத்தடி கேபிள்களுக்கு அதிக கட்டணமும் வழக்கமாகும்.
மாதாந்திர கட்டணம் கவனம்
மாதாந்திர கட்டணம் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ரீடிங் எடுப்பது குறித்தும் முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுகளில் சிக்கல்கள் இல்லாத பட்சத்தில் மாதாந்திர ரீடிங் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த சீர்திருத்தங்கள் தமிழக மின் நுகர்வோருக்கு பலன் அளிக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications