அகோரி கலையரசனால் பெண்களுக்கு ஆபத்து! அவரை பிடிச்சி போலீஸ்ல ஒப்படைங்க! மனைவி பிரகலா பகீர் வீடியோ
சென்னை: அகோரி கலையரசனால் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது, எனவே அவரை பார்த்தால் போலீஸில் ஒப்படைத்துவிடுங்கள் என அவருடைய மனைவி பிரகலட்சுமி ஒரு பகீர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கலையரசன், என்னையும் சாமியார் வேஷம் போட்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் போடி புதுக்காலனி அன்னை இந்தியா ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தவர் கலையரசன். இவர் இங்குள்ள சந்தனமாரியம்மன் ஆசியால் அருள்வாக்கு கூறும் சித்தராக மாறி அகோரி சாமியாராக உருவெடுத்துள்ளார்.

காசிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தீட்சை பெற்றதாக தெரிகிறது. தண்ணீரில் நடப்பேன், முடியை வளர வைப்பேன் என்றெல்லாம் இவர் யூடியூபில் பேசி பிரபலமடைந்தார். இவர் நாட்டுப்புற கலைஞராகவும் இருந்தவர். இவர் பிரகலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது பிரகலட்சுமியை பார்த்த முதல் சந்திப்பிலேயே காதலை வெளிப்படுத்தி அடுத்த நாளே தாலிக் கட்டிக் கொண்டனர்.
இருவருக்கும் 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வழிப்பட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட போது விஜயகாந்தின் மரணம் தனக்கு முன்கூட்டியே தெரியும். அதற்காக அவரை பார்க்க முற்பட்டேன். ஆனால் நான் காசியில் இருந்தேன். விஜயகாந்த் சமாதி சமாதியல்ல. அது ஒரு கோயில் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் யூடியூபர் அகோரி கலையரசனை எங்கு பார்த்தாலும் அவரை போலீஸிடம் ஒப்படைக்குமாறு அவருடைய மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். முன்பெல்லாம் தனது கணவரின் அருமை பெருமைகளை அவருடைய மனைவி கூறி வந்த நிலையில் தற்போது ஒரு புகாரை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: என் கணவரை எங்கு பார்த்தாலும் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுங்கள். அவரால் நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. கலையரசனின் செயல்பாடுகளை கண்டிப்பதால் என் குழந்தைகளை அடித்து துன்புறுத்துகிறார். இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் பிரபலமான கலையரசன் தன் மாணவர்களுக்கு சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற கலைகளை சொல்லிக் கொடுத்து வந்தார். விஜயகாந்த் சமாதியில் கலையரசன் கூறுகையில், குழந்தை வரம் வேண்டுவோர் விஜயகாந்தின் சமாதிக்கு வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
அது போல் எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து இறந்ததற்கு முக்கிய காரணம் மாரடைப்பு அல்ல , அவரது இறப்பு இயற்கையானது அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது மாரிமுத்து ஒரு சீரியலில் பெண்களை திட்டியும் கொடுமைப்படுத்தியும் வருகிறார். நிறைய பேரை அபசகுன வார்த்தைகளால் மாரிமுத்து திட்டியதால்தான் இறந்து போனார் என கலையரசன் தெரிவித்திருந்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications