4 நாள் லீவ்.. மாணவ-மாணவிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை புதன்கிழமை அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் தயாராிக வருகின்றனர். இந்த முறை தீபாவளி என்பது வியாழக்கிழமை வந்துள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை விட்டால் அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறையை சேர்த்தால் தொடர்ந்து 4 நாள் லீவ் கிடைக்கும். இதனால் நவம்பர் 1ம் தேதியான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த அரசு சமீபத்தில் நவம்பர் 1ம் தேதியை அரசு விடுமுறை வழங்குவதாக அறிவித்தது. இதன்மூலம் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஹேப்பியாகினர். இந்த ஹேப்பிக்கு மத்தியில் தான் நேற்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதாவது தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று (நவம்பர் 30) அரைநாள் மட்டுமே செயல்படும். முற்பகலில் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும். பிற்பகலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ளதால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இவர்கள் தங்களின் மகன், மகளோடு சீக்கிரமாக புறப்பட்டு செல்லும் வகையில் இந்த விடுப்பு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 4 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் இன்று அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கரை நாட்கள் விடுப்பு என்பது கிடைத்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் ஹேப்பியாகி உள்ளனர்.
மேலும் நவம்பர் 1ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதற்கு மாற்று தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதிக்கு பதில் பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 9 ம் தேதியான சனிக்கிழமை அன்று செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications