‛‛வாழ்த்துகள்’’.. அப்போ அதுதானா? திடீரென திருமாளவனுக்கு போன் போட்டு பேசிய நடிகர் விஜய்! ஆஹா
சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவனை போனில் தொடர்பு கொண்டு பேசியதும், அதன் பின்னணி குறித்த விபரமும் வெளியாகி உள்ளது.
சென்னை: சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேளையில் சட்டம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அதிக கவனம் பெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
அதாவது நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பணியில் முதலில் ஈடுபட்டார். அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் வாக்காளர்கள் விபரங்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்களை அவர் சேகரித்தார்.
அதோடு சமீபத்தில் நடிகர் விஜய் சட்டசபை தொகுதி வாரியாக 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சென்னை அழைத்து வந்து பாராட்டி உதவித்தொகை வழங்கினார். இந்த வேளையில் அவர், ‛‛ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள்'' என பேசினார். அவரது இந்த செயல்கள் என்பது நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு நுழையலாம் என்பதற்கு வலு சேர்த்து வருகிறது.
மேலும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். அதோடு சமீபத்தில் வழக்கறிஞர்களுடன் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தியதோடு இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவனை போனில் தொடர்பு கொண்டு பேசிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொல் திருமாவளவன் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் நடிகர் விஜய் அவருக்கு போன் செய்து பேசியதோடு, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

அதாவது நடிகர் விஜய் பொதுவாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து உள்ளிட்டவற்றை கூறுவது இல்லை என சொல்லப்படுகிறது. அத்தகைய சூழலில் திருமாவளவனுக்கு இன்று நடிகர் விஜய் போன் செய்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். மேலும் திருமாவளவன் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட தலைவராக உள்ளார். அதோடு தமிழகம் முழுவதும் அவருக்கு ஓட்டு வங்கி உள்ளது. குறிப்பாக வடமாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். இதனால் நடிகர் விஜயின் இன்றைய தொலைபேசி உரையாடல் என்பது அவரது அரசியல் நுழைவுப்பாதையை இன்னும் உறுதி செய்யும் வகையில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நடிகர் விஜய் தனக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதை தொல் திருமாவளவன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்க்கு நன்றி'' என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய், திருமாவளவன் ஆகியோர் தனித்தனியாக இருக்கும் போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
-
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications