சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்.. பொங்கலையொட்டி நாளை, நாளை மறுநாள் இயக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (ஜனவரி 13) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 14) ஆகிய 2 நாட்கள் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்பது வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் இன்று முதல் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். மக்கள் செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கோயம்போடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் இன்று கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து தென்மாவட்டம் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
#VandeBharat Specials between #Chennai Egmore and #Nagercoil to clear extra rush of passengers during #Pongal #Festival
— Southern Railway (@GMSRailway) January 12, 2024
Passengers are requested to take note on this and plan your #travel#SouthernRailway pic.twitter.com/itRAcFp3Ji
அதன்படி ஜனவரி 13 (நாளை), ஜனவரி 14 (நாளை மறுநாள்) என 2 நாட்கள் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண் 06081) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைய உள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 தினங்கள் நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06082) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அன்றைய தினங்களில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் சிறப்பு ரயில் (06082) அன்றைய தினம் இரவு 11.25 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இந்த ரயில்களில் மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும். இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருமார்க்கமாக நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு என்பது தொடங்க உள்ளது.
-
நாகர்கோவிலில் ஹெல்மெட் போடாமல் போனால்.. வீடு தேடி வரப்போகும் அபராதம்.. வந்தது ஏஐ கேமரா -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications