Red Zone.. சென்னையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை! போக்குவரத்தில் மேஜர் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் திங்கட்கிழமை அன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடக்கும் பிரமாண்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றுகிறார். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து நிகழ்ச்சிக்கு வரும் சாலைகள் உள்ள பகுதி, ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிக்கு வரும் சாலையில் உள்ள பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்​னிட்டு வரும் 26 ஆம் தேதி, திங்கட்கிழமை மெரினா கடற்​கரை​யில் உழைப்​பாளர் சிலை எதிரே தமிழ்நாடு ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்​ளார். இந்த ​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்​ளனர். இதை முன்​னிட்டு மெரினா மற்​றும் அதைச் சுற்றி போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளது.

Republic Day police chennai

இதுதொடர்​பாக, போக்​கு​வரத்து போலீ​சார் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில், வரும் 26 ஆம் தேதி காம​ராஜர் சாலை​யில், காந்தி சிலை முதல் போர் நினை​வுச் சின்​னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடி​யும் வரை வாக​னங்​கள் அனு​ம​திக்​கப்பட மாட்​டாது. அடை​யாறு பகு​தியி​லிருந்து காம​ராஜர் சாலை​யில் பிராட்வே நோக்கி செல்​லும் சரக்கு மற்​றும் வணிக வாக​னங்​கள் கிரீன்​வேஸ் சாலை சந்​திப்​பிலிருந்து ஆர்​.கே.மடம் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, கிழக்கு அபி​ராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்​தாஞ்​சன் சந்​திப்​பு, ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே சாலை, ராயப்​பேட்டை மணிக்​கூண்​டு, ஜெனரல் பேட்​டர்ஸ் ரோடு, அண்​ணா​சாலை வழி​யாக பிராட்வே சென்றடைய​லாம்.

அடை​யாறு பகு​தியி​லிருந்து காம​ராஜர் சாலை​யில் பிராட்வே நோக்கி செல்​லும் பிற வாக​னங்​கள், (மாநகர பேருந்​துகள் உட்​பட) காந்தி சிலை சந்​திப்​பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்​பப்​பட்டு ராயப்​பேட்டை 1 பாயிண்ட் நீல்​கிரீஸ், மியூசிக் அகாட​மி, டி.டி.கே. சாலை, ராயப்​பேட்டை மணிக்​கூண்​டு, ஜிபி ரோடு, அண்​ணா​சாலை வழி​யாக பிராட்வே சென்​றடைய​லாம்.

மயி​லாப்​பூர் பகு​தியி​லிருந்து வரும் அனைத்து வாக​னங்​களும் ராயப்​பேட்டை நெடுஞ்​சாலை வந்து ராயபேட்டை 1 பாயிண்ட்​டில், இதர வாக​னங்​கள் இடதுபுற​மாகவோ (அ) வலதுபுற​மாகவோ திரும்பி தங்​களின் இலக்கை அடைய​லாம். மாநகர பேருந்​துகள் இடதுபுற​மாக திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே. சாலை, ராயப்​பேட்டை மணிக்​கூண்டு வழி​யாக பிராட்வே சென்​றடைய​லாம்.

டாக்​டர் நடேசன் சாலை மற்​றும் அவ்வை சண்​முகம் சாலை சந்​திப்பு வழி​யாக காம​ராஜர் சாலை நோக்கி வரும் வாக​னங்​கள் ஐஸ் அவுஸ் சந்​திப்பு நோக்கி திருப்பி விடப்​படும். டாக்​டர் பெசன்ட் சாலை​யி​லிருந்து காம​ராஜர் சாலை நோக்கி வரும் வாக​னங்​கள் பெசன்ட் சாலை ரவுண்​டா​னா​வில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்​படும்.

பார​தி​சாலை​யில் இருந்து காம​ராஜர் சாலை நோக்கி வரும் வாக​னங்​கள் பார​தி​சாலை மற்​றும் பெல்ஸ் ரோடு சந்​திப்​பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்​படும். வாலாஜா சாலை​யில் இருந்து உழைப்​பாளர் சிலை நோக்கி வரும் வாக​னங்​கள் அனைத்​தும் வாலாஜா​சாலை மற்​றும் பெல்ஸ் ரோடு சந்​திப்​பில் பெல்ஸ் ரோடு வழி​யாக திருப்பி விடப்​படும். அண்​ணாசதுக்​கம் அரு​கில் உள்ள பேருந்து நிறுத்​தம் தற்​காலிக​மாக சிந்​தா​திரிப்​பேட்டை ரயில் நிலை​யம் அரு​கில் மாற்​றப்​படும்.

பாரி​முனையி​லிருந்து ராஜாஜி சாலை மற்​றும் காம​ராஜர் சாலை வழி​யாக அடை​யாறு நோக்கி செல்​லும் அனைத்து வாக​னங்​களும் ரிசர்வ் வங்கி சுரங்​க​பாதை​யில் செல்​லாமல் வடக்கு துறை​முக​சாலை வழி​யாக ராஜா அண்​ணா​மலை மன்​றம், அண்​ணா​சாலை, ஜி.பி.ரோடு, ராயபேட்டை மணி​கூண்​டு, வெஸ்ட் காட் சாலை, அஜந்தா சந்​திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.​ராமன் சாலை), ஐஸ்​டிஸ் ஜம்​புலிங்​கம் தெரு இடதுபுறம் (அ) வலதுபுறம் திரும்பி டாக்​டர் ராதாகிருஷ்ணன் சாலை வழி​யாக தங்​கள் இலக்கை சென்றடைய​லாம். அண்​ணா ​சாலை மற்​றும் கொடிமர இல்ல சாலை சந்​திப்​பிலிருந்து போர் நினை​வுச் சின்​னம் நோக்கி வாக​னங்​கள் செல்ல அனு​ம​தி​யில்​லை எனத் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாக, குடியரசு தினத்தை முன்​னிட்டு ட்ரோன்​கள், ரிமோட் மூலம் இயக்​கப்​படும் மைக்​ரோலைட் ஏர்​கி​ராஃப்ட், பாராகிளைடர்​ஸ், பாராமோட்​டார்​ஸ், ஹேன்ட்​கிளைடர்​ஸ், ஹாட் ஏர் பலூன்​கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்​லை​யில் பறக்​க​விட வரும் 25, 26 ஆகிய இரு நாட்​கள் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், உழைப்​பாளர் சிலை மற்​றும் சுற்​றி​யுள்ள பகு​தி​கள், ஆளுநர் மாளிகை முதல் மெரினா கடற்​கரை வரை மற்​றும் தமிழக முதல்​வர் ஆழ்​வார்​பேட்டை இல்​லத்​தில் இருந்து மெரினா கடற்​கரை வரை​யில் செல்​லும் வழித்​தடங்​கள் சிவப்பு மண்​டல​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பகு​தி​களில் ட்ரோன் மற்​றும் மற்​றும் எந்​த​வித​மான பொருட்​களும் பறக்​க​விட தடை விதிக்​கப்​படு​கிறது என சென்னை மாநகர காவல் ஆணை​யர் அருண் தெரி​வித்​துள்​ளார். மேலும், குடியரசு தின நிகழ்ச்சி நடை​பெறும் பகு​தி​யில் 5 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+