கருப்பு பெட்டி கிடைச்சாச்சு.. ஃப்ளைட் ஏன் விழுந்தது? கண்ணாடிய திருப்பினா ஆட்டோ ஓடுமோ: பிரபலம் நறுக்
சென்னை: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி என அழைக்கப்படும் DFDR (Digital Flight Data Recorder) மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியில் பதிவான தகவலின் அடிப்படையில் விபத்துக்கான காரணங்களை 40 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளார்களாம். இந்நிலையில், முன்னாள் விமான நிலைய மேலாளர் மோகன், விமானம் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் சோஷியல் மீடியாவில் வலம் வரும் தவறான தகவல்களை மறுத்துள்ளார்.
விபத்தில் சிக்கிய விமானத்தில், விபத்துக்கு முன்னதாக பயணித்த ஆகாஷ் என்ற நபர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதாவது, விபத்து ஏற்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்புதான், ஆகாஷ் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்திருக்கிறார்..

அப்போது விமானத்தில் பயணிகளின் இருக்கையில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி செயல்படவில்லை, பணியாளர்களை அழைப்பதற்கென்று வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் சரியாகச் செயல்படவில்லை. ஏசி-யும் சரியாக செயல்படவில்லை. இவ்வளவு பெரிய விமான நிறுவனம் தனது சேவைகளை இப்படி வழங்குகிறதே? என்று அந்த வீடியோவில் கேட்டிருந்தார்..
ஏர் இந்தியா நிறுவனம்
இந்த வீடியோவை ஏர் இந்தியா நிறுவனத்திடம் முறையிடலாம் என நினைத்திருந்தாராம். அதற்குள் இணையத்தில் பதிவிட்டுவிடவும், அந்த வீடியோ பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது.. இந்நிலையில், Reflect Prime என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் முன்னாள் விமான நிலைய மேலாளர் மோகன்..
ஏசி வேலை செய்யவில்லையா
அதில் அவர் கூறும்போது, "ஏசி வேலை செய்யவில்லை, கம்ப்யூட்டர் மானிட்டர் வேலை செய்யவில்லை என்று டெல்லியிலிருந்து பிரயாணம் செய்த பயணி சோஷியல் மீடியாவில் வீடியோவில் தெரிவித்திருந்தார்... காற்று வரவில்லை என்று வீடியோவில் தனது இருக்கைக்கு மேலே காட்டுகிறார்..
அதன் பெயர் air louvers என்பார்கள்.. ஏசியை அட்ஜஸ்ட் செய்வது போல, அதனையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.. கம்ப்யூட்டர் டிஸ்பிளேவில், சர்வீஸ் இல்லை என்றுதான் ஏற்கனவே காட்டுகிறது. நான் முன்னாள் ஏர்இந்தியா நிறுவன ஊழியர் என்பதால், நிறுவனத்துக்கு முட்டுக் கொடுக்கவில்லை.
காற்று இல்லாமல் எப்படி பயணித்தார்
டெல்லி டூ அகமதாபாத்துக்கு 2 மணி நேரம் பயணம் செய்து வந்துள்ளார். 30 ஆயிரம் அடியில், ஏசியே இல்லையென்றால், எப்படி அவரால் பயணிக்க முடிந்தது? மேலே காற்று வரும் கருவியை அவர் மூடி வைத்திருக்கிறார்.. இரவு முழுவதும் ஜில்லென்று விமானத்தினுள் இருக்கும்.. விடிகாலையில் பயணிக்கும்போது, காற்று வரும் கருவியை லேசாக திறந்து வைக்க வேண்டும். அந்த வீடியோவில் அந்த கருவி மூடியே இருந்தது.
பிறகு, ஏர் ஹோஸ்டஸை அழைப்பதற்கான பட்டன் வேலை செய்யவில்லை
என்கிறார். அந்த பட்டன் எங்கே இருக்கிறது என்று அந்த பயணிக்கு தெரியவில்லை.
எதிரேயே safty information card வைக்கப்பட்டிருக்கும்.. அதில்தான், அனைத்து விவரங்களும் இருக்கும்.
ஆக்ஸிஜன் இல்லாமல் 30 ஆயிரம் அடிக்கு பறக்கும் என்பதற்கு வாய்ப்பே இல்லை.. கண்ணாடியை திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும் என்று அஜித் படத்தில் ஒரு வசனம் வருமே? அதுபோலத்தான் இநத பயணி சொல்வதும் உள்ளது.
இது டூவீலர் கிடையாது
அதேபோல, 11 வருடமாக இந்த விமானம் ஓடிக் கொண்டிருப்பதால், பழுதுகள் அதிகமாகிவிட்டதாக, சோஷியல் மீடியாவில் மற்றொரு செய்தி உலா வருகிறது. இதுவும் உண்மை கிடையாது.. விமானத்தை பொறுத்தவரை டூவீலர் போல பயன்படுத்த முடியாது..
எல்லாமே cycle reluctant component என்பார்கள்..
உதாரணத்துக்கு 40 முறை தரையிறங்கப்பட்டதுமே, விமானத்தில் டயர் நன்றாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, டயரை மாற்றியாக வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். என்ஜின், சீட்கள் உட்பட விமானத்தில் ஒவ்வொரு சிறிய பாகமாக இருந்தாலும் இப்படித்தான் மாற்றப்பட வேண்டும்.
உதிரி பாகங்கள் பழையதா?
11 வருடமாக உள்ள காரில், அனைத்து உதிரி பாகங்களையும் மாற்றிவிட்டால், அது எப்படி பழைய கார் என்று சொல்ல முடியும? 6 ஆயிரம் மணி நேரம் பறந்தால், விமானத்தின் பாகங்களை கழட்டி போட்டு மாற்றிவிடுவார்கள்.. அதேபோல 8 ஆயிரம் மணி நேரம் பறந்தால், அதற்கொருமுறை உதிரி பாகங்களை புதிதாக மாற்றிவிடுவார்கள்.
வண்டி கட்டுப்பாட்டை இழந்தது என்று பஸ்ஸை சொல்லலாம். ஆனால், விமானத்தை சொல்ல முடியாது. காரணம், கருப்புப் பெட்டி என அழைக்கப்படும் DFDR (Digital Flight Data Recorder) மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் அனைத்துமே வெளியாகிவிடும்.
ஏன் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது என்பதற்கான காரணங்களும் அதில், வரிசைப்படுத்தப்படும். இடதுபுற என்ஜின் என்ன ஆனது? வலதுபுற என்ஜின் கண்டிஷன் உட்பட அனைத்துமே அதில் தெரியவரும்.. எனவே, விபத்துக்கான காரணத்தை யாராலும் மறைக்க முடியாது..
யோசிக்க வேண்டிய தருணம் இது
தற்போது அனைவருமே யோசிக்க வேண்டிய தருணம் இது . இதற்கு முழு பொறுப்பும் ஏர் இந்தியாவுக்குதான்.. விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, விசாரணையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. "உயிர்பலி இனி நடக்கவே கூடாது" என்று அனைத்து விமான நிறுவனங்களுமே உறுதிமொழியை எடுத்து கொண்டு செயல்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications