வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. நம்பர் பிளேட் பார்த்து ஏஐ மூலம் சுங்க வசூல்! சுங்கச்சாவடிகளில் சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாகன நம்பர் பிளேட்டுகள், AI யுடன் செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காணப்பட்டு, பாஸ்டேக் மூலமாக கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் விரைவில் வரப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை முற்றிலும் பூஜ்ஜியமாகக் குறைப்பதே முக்கிய இலக்கு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதும், வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

Number plate AI toll collection FASTag MLFF

இந்த அறிக்கையில், "சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்காக, பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு எனப்படும் MLFF (Multi-Lane Free Flow) தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகள்

இந்த புதிய முறையின்படி, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல், எந்தவித தாமதமும் இன்றி நேரடியாகச் செல்ல முடியும்.

2026ம் ஆண்டின் இறுதிக்குள் ஜிபிஎஸ் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சுங்க வசூல் முறை முழுமையாக நடைமுறைக்கு வரும். இந்த அமைப்பில், தற்போதுள்ள ஃபாஸ்டேக் முறையும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் தொழில்நுட்பமும் ஒன்றாக இணைக்கப்படும்.

ஏஐ பார்த்தே சுங்க வசூல்

முன்னதாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த 3 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொண்டது. ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அந்த நேரம் சுமார் 60 விநாடிகளாகக் குறைந்தது. தற்போது, சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை பூஜ்ஜியமாக மாற்றுவதே அரசின் நோக்கம்.

MLFF தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால், வாகனங்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் கூட சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும்.

இந்த புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நீண்ட வரிசைகள் முற்றிலும் நீங்கும். இதன் மூலம் பயணிகளின் நேரமும் எரிபொருளும் பெரிதும் சேமிக்கப்படும். ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள எரிபொருள் சேமிக்கப்படும், அதே நேரத்தில் அரசின் சுங்க வருவாய் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை அதிகரிக்கும்.

சுங்கக் கட்டணம் - மத்திய அரசு

மேலும், ஃபாஸ்டேக் முறையால் ஏற்கனவே அரசின் வருவாய் சுமார் ரூ.5,000 கோடி அதிகரித்துள்ளது.. புதிய தொழில்நுட்பம் வந்தால், சுங்கக் கட்டண ஏய்ப்பு முற்றிலும் ஒழிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே மத்திய அரசு பொறுப்பு, மாநில அல்லது நகர சாலைகளுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல.

புதிய டெண்டர்கள்

சுங்கச்சாவடி செயல்பாடுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய ஒப்பந்தக்காரர்கள் இரண்டு ஆண்டுகள் வரை தடை செய்யப்பட்டு, புதிய டெண்டர்களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும்.

தற்போது சில இடங்களில் இந்த தொழில்நுட்பம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் இந்த புதிய சுங்க வசூல் முறை படிப்படியாக அமல்படுத்தப்படும். சுங்க அமைப்பை எளிதாகவும், வெளிப்படையாகவும், பயணிகளுக்கு வசதியானதாகவும் மாற்றுவதே அரசின் நோக்கம்" என்று நிதின் கட்காரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+