வாரிசு மட்டும் இருக்கு ஆனா துணிவு இல்லையே .. திமுக ஆட்சி மீது அதிமுக நடிகை விந்தியா அட்டாக்
சென்னை: திமுக ஆட்சியில் வாரிசு மட்டும் இருக்கிறது.. துணிவு இல்லையே என அதிமுகவை சேர்ந்த நடிகை விந்தியா கடுமையாக சாடியுள்ளார்.
அதிமுகவின் தீவிர பிரசாரகர்களில் இருப்பவர் நடிகை விந்தியா. ஜெயலலிதா காலம் தொடங்கி தொடர்ந்து அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் பிரசாரங்களில் விந்தியாவின் அட்டாக் பேச்சு, அதிமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களிலும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விந்தியா.
தற்போதைய சட்டசபை விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக அதிமுக இருந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் பெயரை உச்சரிக்க மறுத்த ஆளுநர் ரவியை அண்ணா திமுக கண்டிக்கவில்லையே என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை என்பது ஒவ்வோர் ஆண்டும் அரசு செயல்படுத்தவிருக்கும் திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும் சம்பிரதாயமாக அறிவிக்கும் உரை. இந்தாண்டும் ஆளுநர் உரையில் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆளுநர் உரையைத்தான் கேட்க வந்திருக்கிறோம், முதலமைச்சர் உரையைக் கேட்க அல்ல. ஆளுநரை அமர வைத்துக்கொண்டு ஒரு முதல்வர் இப்படி பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது என்றார்.
இப்பின்னணியில் நடிகை விந்தியா தமிழ்ந்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பதிவிட்டிருப்பதாவது: கோ பேக் மோடி கோஷம் போட்ட கும்பல்தான் வெல்கம் மோடினு வேட்டிய கட்டிக்கிட்டு பக்கத்துல உட்கார வைச்சு பல் இளிச்ச கும்பல் ., இப்ப அடுத்த பல்டி கெட் அவுட் கவர்னர் , இந்த விளையாட்டு எத்தனை நாளைக்கோ !

எங்கம்மா (ஜெயலலிதா) சபையில இருந்தா அவங்க திருவாய தவிர உத்தரவு இல்லாம ஒரு வாய் திறக்காது ஆனா இங்க 23ஆம் புலிகேசி ஆட்சிதானே நடக்குது உங்க உத்தரவோட மதிப்ப உள்ளாட்சி தேர்தல்லயே பாத்தாச்சு வாரிசு மட்டும் இருக்கு ஆனா துணிவு இல்லையே !
கட்சி போஸ்டர்ல இருந்து கரெண்டு கம்பம் விளம்பரம் வரை தமிழகம் தமிழகம்னு அடிச்சுட்டு ஓவர் நைட்டுல தமிழ்நாடுக்கு தாவினார் பாருங்க அது தான் சடன் பல்டி ஸ்டாலினின் திராவிடமாடல். இவ்வாறு அதிமுக நடிகை விந்தியா கடுமையாக சாடியுள்ளார்.
-
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications