சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுக்கு 2 வேணுமாம்.. இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க.. முந்த பார்க்கும் தேமுதிக.. அதிமுக கூட்டணி ஒரே பிசி!

வேலூர், சென்னை மாநகராட்சிகளை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான களை தமிழகத்தில் தென்பட ஆரம்பித்துவிட்டது. சீட் விவகாரம் சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தை தகவல்களும் வெளியாக துவங்கி உள்ளன. அதிலும் அதிமுக படு சுறுசுறுப்பாக உள்ளது!

அடுத்தடுத்து தந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவை உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தி முடிக்கும் சாதகமான முடிவுக்கு தள்ளி உள்ளது.

அந்த வகையில் கூட்டணியில் உள்ள அதேகட்சிகள்தான், இந்த முறையும் இணைந்து உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்கும் என்றே தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு குட்டு... கே.என்.நேரு ஆதங்கம்கூட்டணிக் கட்சிகளுக்கு குட்டு... கே.என்.நேரு ஆதங்கம்

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

கூட்டணியை பொறுத்தவரை பாமகதான் செம மாஸில் உள்ளது. இடைத்தேர்தல் வெற்றி கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தது பாமகதான். மேலும், அந்த கட்சி தன்னுடைய செல்வாக்கை இன்னமும் இழக்கவில்லை என்பதும், பலமான அஸ்திவாரத்துடனேயே பயணித்து வருகிறது என்பதையும் நிரூபித்துள்ளது. அந்த வகையில், உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுகவிடம் பாமக நிறையவே டிமாண்ட் செய்ய வாய்ப்புள்ளது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கி

இது சம்பந்தமான ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளது. காரணம், எம்பி தேர்தலில் பாமகவுக்கு கிடைத்த பாதகமான ரிசல்ட்தான். அதனால், உள்ளாட்சித் தேர்தலில் நல்ல வாக்கு வங்கியை பெற வேண்டும் என்பதற்காக ஆலோசனை செய்து வருகிறது. முக்கியமாக, வேலூர், சென்னை மேயர் பதவிக்கு பாமக போட்டியிட வேண்டும் என்பதுதான் இந்த கட்சியின் இப்போதைய எண்ணமாக உள்ளது.

செல்வாக்கு

செல்வாக்கு

அதேபோல, தேமுதிகவை எடுத்து கொண்டால், இன்னமும் விஜயகாந்த்துக்கு கிராமப்புற பகுதிகளில் செல்வாக்கு ஓரளவு உள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிக்கு பாமகவுக்கு அடுத்தபடியாக விஜயகாந்தின் வருகையும், தேமுதிகவின் செல்வாக்கும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. அதனால்தான் முதல்வர், ரிசல்ட் வந்த அன்றைய தினமே டாக்டர் ராமதாசுக்கும், விஜயகாந்துக்கும் போனை போட்டு நன்றி தெரிவித்தார்.

வேலூர், சென்னை

வேலூர், சென்னை

எனினும் இவர்களும் எம்பி தேர்தல் முதல் எதிலயும் சோபிக்கவில்லை. அதனால் வர போகும் உள்ளாட்சி தேர்தலை வைத்துதான் கட்சியை பலப்படுத்த உள்ளனர். அதற்காக மேயர் பதவிக்கு போட்டியிட அதிமுகவிடம் சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதில் என்ன சிக்கல் என்றால், வேலூர் அல்லது சென்னையை தேமுதிகவும் கேட்டு வருகிறதாம். முந்திக் கொண்டு சீட்டை கேட்டுவிட்டால், எப்படியும் சென்னை, அல்லது வேலூரை வாங்கிவிடலாம் என்றும் ஒரு கணக்கு போட்டு வருகிறதாம்.

தோல்வி

தோல்வி

இதற்கு நடுவில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசிசண்முகம் உள்ளார். வேலூர் எம்பி தேர்தலில் நிறைய தாராளத்தை காட்டி.. தேர்தல் நின்று போய்... திரும்பவும் வேலூரில் தேர்தல் நடந்து.. அதில் மேலும் கரன்சிகளை இறக்கி, தோல்வியையும் சந்தித்து ரொம்பவும் நொந்து போனவர் ஏசி சண்முகம். அதனால், அவரை சமாதானப்படுத்திய அதிமுக தலைமை, வேலூர் மேயர் பதவியை தருகிறோம் என்று சொன்னதாம். அதனால், ஏசிஎஸ்சும் வேலூரை கேட்பார் என்று தெரிகிறது.

அதிமுகவுக்கு சிக்கல்

அதிமுகவுக்கு சிக்கல்

ஆக.. பாமக, தேமுதிக, புநீக.. என இவர்கள் எல்லாருமே சென்னை, வேலூரை குறி வைத்துள்ளதால் சிக்கல், தலைமைக்குதான் ஏற்படும் என தெரிகிறது. ஆளுக்கு 2 சீட் கேட்கிறார்களாம்.. இதில் பாஜகவும் இணைகிறது.. இருக்கிற 15-ல் யாருக்கு பிரித்து தருவது, எந்த இடங்களை தருவது, ஒருகட்சிக்கு தந்தால், இன்னொரு கட்சியை எப்படி சமாளிப்பது என்று இடியாப்ப சிக்கலில் அதிமுக உள்ளதாம். எப்படியும் ஒரு முடிவு எடுத்துதானே ஆக வேண்டும்.. பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று!

English summary
there is tough race between dmdk, and pmk in local body election with aiadmk alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X