கவர்ச்சிகர அறிவிப்புடன் ரெடியாகுது? அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழுவை அமைத்த எடப்பாடி
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், உதயகுமார், செம்மலை, வளர்மதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 பேர் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. சரியாக சொல்வது என்றால் 4 மாதங்களே உள்ளன. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக - பாஜக கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக வியூகம் வகுத்து வருகிறது.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும் என்று அதிமுக அவ்வப்போது அழைப்பு விடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை அதிமுக பெற்றுள்ளது. இப்படி சட்டமன்ற தேர்தல் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவையும் அமைத்துள்ளது. நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சிவி சண்முகம், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, உதயகுமார், செம்மலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளது.
இந்தக் குழு தமிழகம் முழுவதும் சென்று விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் வென்று எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வரும் அதிமுக, பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் வாக்குகளை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications