வறட்டு கவுரவம் வேண்டாம்.. எடப்பாடிக்கு பிரஷர் கொடுத்த டெல்லி! வேலுமணியிடம் கறாராக பேசிய அமித் ஷா!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக-பாஜக கூட்டணி அடுத்த நகர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால், பீகார் மாடல் தான் சரி என பாஜக தலைமை முடிவெடித்துள்ளது. அதாவது சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கட்சிகளை நிதிஷ்குமார் கூட்டணியில் சேர்த்த நிலையில், தமிழகத்தில் ஓபிஎஸ், டிடிவியுடன் எடப்பாடி பழனிசாமியும் சமரசத்துக்கு தயாராக வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்திய தகவல் வெளியாகியுள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்தன. ஆனால் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் சேர்த்துப் பார்த்தால், 26 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருக்குமென இரு தரப்பினரும் பின்னர் அடுத்தடுத்து பேசி வந்தனர்.
இதன் பிறகு, 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. அப்போது அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தமிழக பாஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிமுக-பாஜக உறவு சுமூகமாக இருந்தது.

அதிமுக பாஜக கூட்டணி
ஆனால் 9 மாதங்களாகியும் அந்த கூட்டணியில் புதிய கட்சிகள் சேரவில்லை. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம், விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று அறிவித்ததால், அவர்களுடன் கூட்டணிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. பாமக., தேமுதிக மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளிடம் தான் பாஜக மற்றும் அதிமுக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் பாமக பிளவுபட்டுள்ள சூழல் நிலவும் நிலையில், கூட்டணி பேச்சுகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ், டிடிவி
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என சிலர் ஆலோசனை கூறினாலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த பரபரப்பான சூழலில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும் கட்சிக்குள் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திருச்சியில் இருந்த ஹோட்டலில் வேலுமணி சந்தித்து பேசினார்.
வேலுமணி அமித் ஷா சந்திப்பு
அப்போது, திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அவசியம் என்று அமித் ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இல்லாத அனைத்து கட்சிகளையும் இத்தரப்பில் இணைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தாராம். மேலும், 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், தினகரன் தலைமையிலான அமமுக மற்றும் தேமுதிக ஆகியவற்றை கூட்டணியில் சேர்க்க முன்வந்தபோதும், எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்ற பழைய நிகழ்வையும் அமித் ஷா நினைவூட்டியுள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமார்
அந்த கட்சிகள் கூட்டணியில் இருந்தால் திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைப்பது தடுக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல பீகாரில் நிதிஷ் குமார், முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பா.ஜ.க. வலியுறுத்தியதால் சிராக் பஸ்வான் மற்றும் ஜிதன் ராம் மஞ்சி உள்ளிட்டவர்களை கூட்டணியில் சேர்த்தார். அதன் மூலம் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரிய வெற்றி கிடைத்தது என்ற உதாரணத்தையும் அமித் ஷா கூறியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
இதைப் போலவே, எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதத்தை விட்டு விலகி, அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் இதுதான் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வலுவான கூட்டணி உருவாகவில்லை என்றால் அதிமுக நிர்வாகிகளே நம்பிக்கை இழந்து வேறு கட்சிகளுக்கு செல்லக்கூடும் என்றும் அமித் ஷா எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications