வெயிட்டான விருந்து வைத்த நயினார்.. எடப்பாடி ஹேப்பி! திமுகவுக்கு அஜீரணமாகி விட்டது என்கிறார் தமிழிசை!
சென்னை: பாஜக- அதிமுக கூட்டணி கூட்டணி விருந்ததை பார்த்து திமுக கூட்டணிக்கு அஜீரணமாகி விட்டது எனவும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தமிழகத்தில் வேலை பார்க்கும் நிலையில், அவர்கள் தமிழகத்தில் வாக்களிக்கக் கூடாத என தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்தளித்தார்.
அப்போது அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே நல்ல சந்திப்பு நடைபெற்றது. அரசியல் மேடைகளில் மட்டுமில்லாமல் விருந்துக்ள் முலமாகவும் சந்தித்து கொள்ளலாம். நல்ல விருந்து பாரம்பரிய, சிறு தானிய, வெளி நாட்டு உணவு வகைகள் இருந்தன. நாங்கள் மகிழ்ச்சியாக உண்டு ஆரோக்கியமாக இருக்கிறோம்.

கூட்டணி விருந்ததை பார்த்து சிலருக்கு அஜீரணம் வந்து விட்டது. இந்த விருந்தை பார்த்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதிமுக- பா.ஜ.க. கூட்டணி குறித்து என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும். அதனை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. நல்ல ஆரோக்கியமான சந்திப்பு. முதலமைச்சர் தூத்துக்குடி சென்று உள்ளார். தூத்துக்குடியில் உதிரி பாகங்கள் தயாரிக்க காரணம் விமான நிலையம், துறைமுகம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விரிவாக்கம் செய்யப்பட்டதால் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் நம்பிக்கை வந்து உள்ளது. இதனால் முதலீடு எப்படி வருகிறது என்றால் இந்திய பொருளாதாரம் மேம்பட்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு முதலீடு வருகிறது. ஸ்டெர்லைட் மூடப்பட்டு உள்ளது. அதில் வேலை இழந்த தூத்துக்குடி மக்களுக்கு தற்போது உள்ள தொழிற்சாலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழகத்திற்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சொல்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேறு நாட்டில் இருந்து வந்து ஒட்டு போடலாம். வெளி மாநில தொழிலாளர்களிடம் வேலை வாங்குவீர்கள். பிரியங்கா காந்தி எப்படி வயநாட்டில் வந்து நின்றார். அப்போது அங்கிருந்து வந்தவர்கள் ஒட்டு போட முடியாதா என்ன? எல்லாவற்றிக்கும் பயம்.
2026ம் ஆண்டு தேர்தலில் திமுக, இந்தியா கூட்டணி தோற்க போகிறது என்பது சிதம்பரத்திற்கு நன்றாக தெரியும். அதனால் தான் திமுக கூட்டணி கட்சியினர் இப்போது கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர். தேர்தல் ஆணையம் சரியான விளக்கத்தை தந்து விட்டது. தமிழகத்தில் மோசமான அரசு நடந்து வருகிறது. விவசாயிகள் பாம்பு கடி போன்றவற்றில் இருந்து தப்பி வாங்கும் கருவிக்கு தரப்பட்ட மானியத்தை தமிழக அரசு நிறுத்தி விட்டது.
எல்லா விததிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து வருகிறது. கார்ப்ரேட் போல் அறநிலை துறை செயலாற்றுகிறது. எந்த பணியும் நிறைவு செய்யாமல் குடமுழுக்கு நடத்துகின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக கமல்ஹாசன் நன்றியை தேடி தேடி திமுகவிற்கு தெரிவிக்கிறார். மக்களின் வாழ்வியலை புண்படுத்தி உதாசீனத்தப்படுகிறது. பெண்கள் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றார்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?












Click it and Unblock the Notifications