Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 கேட்கும் ஐஜேகே.. அப்போ நாங்க என்ன சும்மாவா? 12 கேட்கும் ஜிகே வாசன்! பாஜக கூட்டணியில் பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக -பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி இணைந்திருக்கும் நிலையில் ஆறு தொகுதிகள் வரை கேட்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஐஜேகே-வுக்கே ஆறு தொகுதிகள் கேட்கும் நிலையில் தங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸின் ஜிகே வாசன் பாஜக விட கோரிக்கை விடுத்து வருவதாக சொல்கின்றனர்.

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான சண்டைகள் மெதுவாக வெளியில் வரத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே பல கட்சிகளை ஒரே குடைக்குள் வைத்திருக்கும் இந்தக் கூட்டணியில், இப்போது "யாருக்கு எத்தனை தொகுதி" என்ற கேள்வியே பெரிய தலைவலியாக மாறியுள்ளது. சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே), தங்களுக்கு ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

AIADMK BJP NDA

அதிமுக பாஜக கூட்டணி

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியை அடிப்படையாகக் கொண்டு, அதற்குச் சமமான சட்டப்பேரவைத் தொகுதிகள் என்ற கணக்கில் இந்த கோரிக்கை வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஐஜேகே-வுக்கே ஆறு தொகுதிகள் என்ற நிலை உருவாகும் போது, தங்களுக்கு குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே. வாசன் பாஜக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 சட்டப்பேரவை தேர்தல்

தமிழக அரசியல் சூழல் தற்போது நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை தனித்தனி பாதையில் பயணிக்க, கூட்டணிகளின் பலம் தான் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. இதை உணர்ந்த அதிமுகவும் திமுகவும் தங்கள் கூட்டணிகளை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐஜேகே இணைந்திருப்பது, அந்த அணிக்கு ஒரு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

ஐஜேகே

ஆனால், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரும், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்துவும் பங்கேற்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. முதலில், தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் தான் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. பின்னர், விழா நடைபெறும் இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் போலீஸார் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் திரும்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதனால், கூட்டணிக்குள் உள்ள உட்புற சிக்கல்கள் வெளிப்படையாக பேசப்படத் தொடங்கின. இந்த சூழலில், ஐஜேகே தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஐஜேகே 6 தொகுதி

பிப்ரவரி 8-ம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற உள்ள மாநில மாநாடு, அந்தக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தும் மேடையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஜேகே நிர்வாகிகள் கூறுகையில், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கின்றனர். கடந்த 2014, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் பாஜக கூட்டணியில் ஐஜேகே போட்டியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அதற்கேற்ற வகையில் சட்டப்பேரவைத் தொகுதிகள் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

மற்றொரு பக்கம், நீண்ட காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ், இந்த முறை தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட தமாகா, 2024 மக்களவைத் தேர்தலில் மூன்று இடங்களில் நின்றது. ஆனால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தமாகா உறுதியாக உள்ளது. இதற்காக, 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைமையிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜிகே வாசன்

இதற்குப் பின்னணி என்னவென்றால், பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி, பொதுவான தனி சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால் குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் விதிமுறையே. இல்லையென்றால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சின்னம் வழங்கப்படும். இதை தவிர்க்கவே, தமாகா இந்த 12 தொகுதி கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்டிஏ தொகுதி பங்கீடு

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட பல கட்சிகளும், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களும் இணைந்துள்ள நிலையில், அனைவருக்கும் திருப்திகரமான தொகுதி ஒதுக்கீட்டை வழங்குவது, அதிமுக தலைமைக்கும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், பெரிய அரசியல் சவாலாகவே மாறும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில், இந்த தொகுதி பங்கீடு விவகாரம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் மேலும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+