திமுக சப்போர்ட்.. அதிமுகவில் பதவி! எடப்பாடி வீட்டில் கொந்தளித்த ர.ர.க்கள்! கும்மிடிப்பூண்டி பரபர!
சென்னை: செங்கோட்டையன் விவகாரம் பரபரப்பாய் போய்க்கொண்டிருக்க திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை வீட்டில் போராட்டத்தில் குதித்தனர் கும்மிடிப்பூண்டி அதிமுகவினர். கட்சிக்காக பாடுபட்ட நிர்வாகிகளை புறந்தள்ளி விட்டு வேறு கட்சியிலிருந்து வந்தவர்களை ஒன்றியத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களை நிர்வாகிகளாக போட்டிருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் கும்மிடிப்பூண்டி ரத்தத்தின் ரத்தங்கள்.
மாவட்ட செயலாளர் பலராமன் கொடுத்த நிர்வாகிகள் பட்டியலை புறந்தள்ளி விட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கொடுத்த பரிந்துரை பட்டியலை அப்படியே அச்சடித்துக் கொடுத்திருப்பது தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
சமீபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி தொகுதியை நிர்வாக வசதிக்காக பல்வேறு ஒன்றியங்களாக பிரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி முன்பு கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் மற்றும் பூண்டி என 3 ஒன்றியங்களாக செயல்பட்டு வந்தவை தற்போது 6 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக போராட்டம்
கும்மிடிப்பூண்டியை கிழக்கு,மேற்கு, தெற்கு என பிரித்து அதற்கு தனித்தனியாக ஒன்றிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த ஒன்றிய செயலாளர்கள் கட்சிக்காக பணியாற்றிய நபர்களாக இல்லாமல் திமுகவினுடன் கைகோர்த்து நிற்பவர்களும் அந்த ஒன்றியத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களையும் போட்டு இருப்பதாக கொதித்துப் பேசுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இந்நிலையில் இது தொடர்பாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டு முன் குவிந்த கும்மிடிப்பூண்டி பகுதி அதிமுகவினர், உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும், எனவும் ஆதரவாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கும்மிடிப்பூண்டி தொண்டர்கள்
இது தொடர்பாக பேசிய அவர்கள்," கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எம். ஸ்ரீதர் மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர். அவர் சம்பந்தப்பட்ட கும்மிடிப்பூண்டி தொகுதியில் வசிக்காமல் அம்பத்தூர் தொகுதியில் வசித்து வருவதாகவும், இதுவரை நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட எந்த கட்சி பணியையும் பெரிதாக செய்தது கிடையாது. பகுதி நேர அரசியல்வாதியான அவருக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பு கொடுத்தது எப்படி என தெரியவில்லை.
ஒன்றிய செயலாளர் விவகாரம்
அதேபோல கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ரமேஷ் குமார் 2021 சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியின் சிட்டிங் திமுக எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜனுக்கு ஆதரவாக வேலை பார்த்தவர். அதன் காரணமாக அந்த தேர்தலில் அவர் வசித்து வரும் வார்டில் திமுக 495 வாக்குகளும் அதிமுக கூட்டணி வெறும் 89 வாக்குகளும் பெற்றதற்கான ஆதாரங்களும் உள்ளது. மேலும் ரமேஷ் குமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஒன்றிய குழு தலைவருக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்.
திமுக ஆதரவு குற்றச்சாட்டு
இது தவிர திமுகவின் நிர்வாகிகளுடன் இணைந்து கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து செய்து வருகிறார். திமுக நிர்வாகிகள் மூலம் பல்வேறு பலன்களை பெற்ற நபரை போட்டால் எப்படி நம்மால் கட்சியை வளர்க்க முடியும். எப்படி அதிமுகவை மீண்டும் வெற்றி பெற வைக்க முடியும்? அதேபோல கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி. சி. மகேந்திரன், சொந்த ஊர் ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகில் எகுமதுரை ஊராட்சியை சேர்ந்தவர். அவரது ஒன்றியத்திற்கு சம்பந்தமில்லாத சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியம் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வடக்கு அரசியல்
ஒரு ஒன்றிய செயலாளர் என்பவர் அந்த ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களின் முழு தகவல்களையும் உள்ளங்கையில் வைத்திருக்கும் நபராக இருக்க வேண்டும். எந்தெந்த கிராமத்தில் யார் பெரிய ஆள்? யாரைப் பிடித்தால் நம் கட்சிக்கு வாக்கு கிடைக்கும்? எந்த கிராமத்தில் நம்முடைய கட்சி வளர்ச்சி பெறாமல் இருக்கிறது என கண்டறிந்து பணிகளை செய்பவராக ஒன்றிய செயலாளர் இருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத ஒன்றியத்திலிருந்து புதிய நபரை கொண்டு வந்து போடுவதனால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது என எம்.ஜி.ஆர் காலத்து ரத்தத்தின் ரத்தங்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தொண்டர்கள் கோபம்
இது தவிர மகேந்திரன் திமுக எம்எல்ஏ கோவிந்தராஜனின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படும் நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகேந்திரனின் வார்டில் திமுக 570 வாக்குகளும் அதிமுக கூட்டணி வெறும் 36 வாக்குகளும் தான் பெற்றது என்ற ஆதாரத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். தீவிரமான திமுக ஆதரவாளர்களை அதிமுக ஒன்றிய செயலாளர் நியமித்திருப்பதன் மூலமாக அதிமுகவின் கோட்டையான கும்மிடிப்பூண்டியில் ஓட்டை விழுந்திருப்பதாகவும் கட்சிக்காக எத்தனை வருடம் உண்மையாக உழைத்த நிர்வாகிகள் கொந்தளிப்பதாகக் கூறப்படுகிறது.
பலராமன் பட்டியல்
மேலும் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைப் போலவே எல்லாபுரம் ஒன்றியத்திலும் திமுக ஆதரவாளர்களும் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நபர்களுமாக தான் புதிய நபர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இவை அனைத்துக்கும் பின்னால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் இருப்பதாகவும் , மாவட்ட செயலாளர் பலராமன் கொடுத்த பட்டியலை தவிர்த்து விட்டு மேல் இடத்து 'லாபி' மூலமாக விஜயகுமார் தன்னுடைய ஆதரவு ஆட்களை கொண்டுவந்து நுழைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இப்படி கட்சிக்கு சம்பந்தமே இல்லாத கட்சிக்கு உழைக்காத உள்ளூர் மக்களிடம் அறிமுகம் இல்லாத நபர்களை நிர்வாகிகளாக போட்டால் நாளைக்கு தேர்தலின் போது கட்சியினுடைய வேட்பாளருக்கு வாக்குகளை வாங்கி கொடுக்க போவது யார் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
-
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு!










Click it and Unblock the Notifications