சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெறிக்கவிட்ட அதிமுக.. பீச்சில் சத்தியம் செய்துவிட்டு போன சசிகலா... ரிட்டர்ன் ஆனா என்னல்லாம் நடக்குமோ

அதிமுகவுக்குள் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் வெடித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பீச்சில் உள்ள ஜெயலலிதா சமாதியில், சத்தியம் செய்துவிட்டு போன சசிகலா, விரைவில் வெளியே வரவுள்ளார். அதற்குள்ளாகவே அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இனி சசிகலா வெளியே வந்தால் என்னெல்லாம் நடக்குமோ என்ற பரபரப்பு கூடியுள்ளது.

சசிகலா சிறை செல்லும்முன்பு, "அதிமுகவை எந்த சக்தியாலும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும், அதிமுக மீதான சிந்தனை எப்போதுமே எனக்கு இருக்கும்" என்றுதான் சொல்லிவிட்டு போனார்.

பீச்சில் ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சத்தியம் செய்தபோது, சசிகலா மிகுந்த ஆக்ரோஷமாக இருந்தார்.. சத்தியம் செய்த பிறகு, கையில் ஒட்டிய பூக்களை தட்டிவிட்டார்.

AIADMK: ராணுவ கட்டுப்பாடு தேவை... எடப்பாடி பழனிசாமி... பன்னீர் கூட்டறிக்கை!!AIADMK: ராணுவ கட்டுப்பாடு தேவை... எடப்பாடி பழனிசாமி... பன்னீர் கூட்டறிக்கை!!

அமமுக

அமமுக

அப்போது இருந்த அதிமுகவே வேறு.. இப்போதுள்ள அதிமுகவே வேறு... அப்போது அமமுக என்ற கட்சியே உதயமாகவில்லை... அவர் ஜெயிலுக்கு சென்றது முதல் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது என்று சொல்வதா, அல்லது இரட்டை தலைமையில் சிக்கி திணறி வருகிறது என்று சொல்வதா தெரியவில்லை.

ஜெயில்

ஜெயில்

ஆனால் வெளியில் நடக்கும் எல்லா விஷயங்களும் சசிகலாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுதான் வருவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.. அதன் அடிப்படையில், ஜெயிலுக்குள் இருந்தே வேறு வேறு ரூபத்தில் காய்களை நகர்த்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது. சில தினங்களுக்கு முன்பிருந்தே சசிகலா விடுதலை பற்றி தகவல்கள் வெளியாயின.. இந்த விடுதலையை வைத்து ஆளும் தரப்பு ஒரு கணக்கை போட்டதாம்.

தேர்தல்

தேர்தல்

அதற்கு காரணம், தங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு திமுக உள்ளது என்பதையும், இதே நிலை நீடித்தால் வரும் எம்எல்ஏ தேர்தலை சந்திக்க முடியாது என்ற கலக்கமும் அதற்கு ஏற்பட்டது... அது மட்டுமல்ல, கட்சிக்குள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பனிப்போர் அதிகமாகியே வருகிறது.. வருஷந்தோறும், கட்சி சார்பாக அச்சிட்டு வெளிவரும் காலண்டரில்கூட யார் படம் இடம்பெறுவது என்ற பிரச்சனை மறைமுகமாக ஓடி கொண்டுள்ளது.

பாஜக

பாஜக

விரிசல் விழுந்த கட்சியை ஒன்றிணைக்கவும், வலுப்படுத்தவும் சசிகலா என்ற மிகப்பெரிய ஆளுமையால்தான் முடியும் என்று அதிமுகவே ஒரு கட்டத்தில் நம்ப ஆரம்பித்துவிட்டது.. இதே நம்பிக்கையை பாஜக முன்பிருந்தே சசிகலா மீது வைத்தும் வந்தது.. இன்றும் அப்படித்தான் ஒரு பிரச்சனை தேனியில் வெடித்துள்ளது.

 இரட்டை தலைமை

இரட்டை தலைமை

3 வருடமாக இலைமறை காய்மறையாக இரட்டை தலைமை விவகாரம் இருந்தாலும், இன்றைய தினம் ஏன், எதற்காக, யாரால் வெடித்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக - அமமுக என்ற கட்சிகளின் நிலை இனி எப்படி இருக்கும்? சசிகலா விடுதலையாகி வெளியே வந்தால், என்னென்ன நடக்கும் என்பதுதான் யோசனையாக உள்ளது.

 அதிமுக - அமமுக

அதிமுக - அமமுக

ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவுடன் கூட்டு இல்லை என்ற நிலைப்பாட்டில் டிடிவி தினகரன் உறுதியாக இருக்கிறார்.. இதே நிலைப்பாடுதான் அதிமுகவுக்கும் உள்ளது. "அந்த ஒருத்தரை" தவிர யார் வேண்டுமானாலும் எங்களுடன் வரட்டும் என்று அதிமுகவின் ஜெயக்குமார் உட்பட சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அதேசமயம் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் முதல் சசிகலாவுக்கு ஆதரவானவர்களும் பிரதானமாக இருக்கிறார்கள். இதுவரை இவர்கள் சசிகலாவை விமர்சித்து, காட்டமாக எந்த பேச்சுமே பேசியது இல்லை.. அவ்வளவு ஏன், எடப்பாடியாரே சசிகலா பேச்சை எடுத்தது கிடையாது.

 திவாகரன்

திவாகரன்

இப்போதே இவர்கள் இப்படி மல்லுக்கட்டுகிறார்கள் என்றால், நாளை சசிகலா வெளியே வந்து, இரு கட்சிகளும் ஒன்றிணைந்தால், எப்படி இருக்கும் என தெரியவில்லை.. அப்படி இணையும்போது, டிடிவி தினகரனுக்கு கட்சியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்? திவாகரன் ரோல் அப்போது எப்படி இருக்கும் என்பதும் பெரிய எதிர்பார்ப்புக்குரியதுதான்.. ஆனால் சசிகலா வெளியே வந்தால் நிச்சயம் அதிமுகவின் அதிருப்திகள் அப்பட்டமாக வெளியே தெரியவரும், அது எப்படியும் திமுகவுக்கே சாகமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
aiadmk: who is the cm candidate issue in aiadmk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X