Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமிக்கு ’நோபல் பரிசு’! ‘சின்னம்மா’ இல்லைனா இபிஎஸ் இல்லை! கொந்தளித்த கோவை செல்வராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தியாவில் மட்டும் இல்லை உலகத்தில் துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை எடப்பாடிக்கு கொடுக்கலாம் எனவும், சசிகலா இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்க்கை இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்," செல்வராஜூம், ஜேசிடி. பிரபாகரனும் அதிமுகவிற்கு விசுவாசம் இல்லாதவர்கள். கட்சிக்குள் இருந்தே அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்" என கடுமையாக விமர்சித்தார். இதற்கு கோவை செல்வராஜ் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை செல்வராஜ்

கோவை செல்வராஜ்

சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், "சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது தகுதித், தராதாரம் இல்லாமால், மூன்றாம் தர அரசியல் வாதி போல் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் என்னை பேசியுள்ளார். அவரின் தரகுறைவான பொறுப்பெற்ற செயலை அதிமுகவினர் கேவலாக பார்க்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

என்னையும், ஜேசிடி பிரபாகரையும் எடப்பாடி பழனிச்சாமி தரகுறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் வரலாறு தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமிதான். கடந்த காலங்களில் வாய் மூடி உட்கார்ந்து கொண்டிருந்தவர் தான் எடப்பாடி, துரோகம் செய்வதை தவற எடப்பாடிக்கு என்ன தெரியும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு துரோகம் செய்வதவர் தான் எடப்பாடி. இந்தியாவில் மட்டும் இல்லை உலகத்தில் துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை எடப்பாடிக்கு கொடுக்கலாம்.

ஆணவத்தின் உச்சம்

ஆணவத்தின் உச்சம்

அரசியலில் பண்பாடு தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆணவத்தின் உச்சியில் புத்தி சுவாதீனம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அதிமுகவை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எடப்பாடிக்கு அதிமுகவின் வரலாறு தெரியுமா? அதிமுகவை அழிக்கும் சக்தியாக எடப்பாடி உள்ளார். எங்களைப் பற்றி பேச தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா.

சசிகலா இல்லையென்றால்..

சசிகலா இல்லையென்றால்..

நீங்கள் ஆட்சியில் இருந்தபோது கொடநாடு வழக்கில் ஏன் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை? அப்போது கொடநாடு வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரை ஏன் கைது செய்யவில்லை? அதிமுகவிற்கு ஏழரை நாட்டு சனி தான் எடப்பாடி பழனிச்சாமி. இதற்குப் பின்பு எங்களைப் பற்றி தகாத முறையில் பேசினால் அவர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டப்படும். சின்னம்மா இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்க்கை இல்லை. 15 ஆண்டு காலம் எம்பி, எம்.எல்.ஏ.சீட் கொடுத்தவர் சசிகலா. அவர் இல்லையென்றால் எடப்பாடியே கிடையாது." என ஆவேசமாகப் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+