Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலிமையான தலைமை இல்லை.. அதிமுக சரிந்து கிடக்க இதுதான் காரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு வலிமையான தலைமை அமையாததால் நான்கு பிரிவுகளாக சரிந்து கிடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பேசினர். பின்னர் இறுதியாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

 மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அவர் பேசுகையில், புதிய நிர்வாகிகள் பலர் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். பழைய நிர்வாகிகள் பலர் இருப்பீர்கள். கடமையை செய்ய காலம் ஒரு கொடையாக இந்த பொறுப்பை உங்களுக்கு வழங்கி உள்ளது. தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்துங்கள். கூட்டங்களை நடத்துவதுதான் கழகத்தை வலிமைப்படுத்தும். அனைவரும் சேர்ந்து கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். தனி மனிதரை விட கழகம் தான் பெரியது.

எனது கடமை

எனது கடமை

அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது.

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நமது கவனத்தை திசை திருப்புவது தான் எதிரிகளின் ஒரே நோக்கம். திராவிட மாடல் என்ற சொல்லே, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவிட்டது. நமது நிதி நிலைமை மட்டும் சீராக இருந்திருந்தால், இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி இருப்போம். இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.அடுத்த சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இதுதான் அடித்தளம்.

பாஜக மீது விமர்சனம்

பாஜக மீது விமர்சனம்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக எதையும் செய்யும். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழ் தனமான அரசியலுக்கும் செல்வார்கள். மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக. அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர்க்காயப் பார்க்கிறது.

அதிமுக பற்றி ஸ்டாலின்

அதிமுக பற்றி ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக கலகலத்துக் கிடக்கிறது. உறுதியான, வலிமையான தலைமை அதிமுகவுக்கு அமையாததால், அதிமுக நான்கு பிரிவுகளாக சரிந்து கிடக்கிறது. திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும், வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டுமே வெல்லும். அதற்கு எடுத்துக்காட்டாக திமுக உள்ளது.

பணிகளை தொடங்குங்கள்

பணிகளை தொடங்குங்கள்

சாதனைகளை எடுத்து சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். அதற்கு நமது சாதனைகளை பதிலாக சொல்ல வேண்டும். 40க்கு 40 என்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவோம். அதற்காக நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே துவங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+