வெண்ணெய் திரண்டு வரும் போது.. பானையை உடைத்த எடப்பாடி.. பாஜகவின் திட்டத்தில் விழுந்த ஓட்டை? என்னாச்சு
சென்னை: தமிழ்நாட்டில் மெகா கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும், பாஜகவின் அந்த திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஓட்டையை ஏற்படுத்திவிட்டதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன.
திமுக + காங்கிரஸ் தொடருமா அல்லது திமுக + பாஜக கூட்டணி அமைக்குமா, அதிமுக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயல்கிறதா என்று விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி எப்படி இருக்க வேண்டும், பாஜக கூட்டணி தொடர்பாக என்ன மாதிரியான திட்டங்களை வகுத்து வருகிறது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்
ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: எடப்பாடி பாஜக கூட்டணியில் நீடிக்க மாட்டார் என்று நினைக்கிறீர்களா?
பதில்: பாஜக தனது கூட்டணியில் எல்லோரும் நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எடப்பாடி + ஓபிஎஸ் + கமல்ஹாசன் + அன்புமணி + தினகரன் என்று எல்லோரும் இருந்தால் திமுகவை காலி செய்ய முடியும். திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்று பாஜக நினைக்கிறது. இந்த இதற்காக தினகரனை சிவகங்கை தொகுதியிலும், கமல்ஹாசனை கோவை அல்லது தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட வைக்க பாஜக பிளான் போட்டது எல்லாம் உண்மை.கூட்டணி அமைந்தால் 30 இடங்களை வெல்ல முடியும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் எடப்பாடி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. வெண்ணை திரண்டு வரும் தாழியை உடைப்பது எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்தை பகைத்துக்கொண்டு உள்ளார். அதிமுகவை வைத்து பெரிய கூட்டணியை உருவாக்கலாம் என்று மோடி நினைத்துக்கொண்டு இருக்கும் போது அதிமுகவிற்கு உள்ளேயே எடப்பாடி பிரிவினையை ஏற்படுத்தி உள்ளார்.

ஓபிஎஸ்
பன்னீர்செல்வத்தை நீக்கி அனைத்தையும் எடப்பாடி காலி செய்துவிட்டார். தோல்வி அடைந்த அதிமுக அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இது பெரிய தவறு. பாமகவையும் எடப்பாடி கழற்றிவிட்டுவிட்டார். பாமக கூட ஸ்டாலினுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அப்படிப்பட்ட பாமக வெளியேறிய போது அவர்களை தடுக்க எடப்பாடி முயற்சி செய்யவில்லை. அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெளியேறிய போதும் எடப்பாடி பாஜகவை தடுக்கவில்லை. இதன் அர்த்தம்.. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜகவிற்கு விருப்பம் இல்லை என்பதுதான். அவர் சட்டமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். 2026 தேர்தல்தான் எடப்பாடியின் குறி.

2026 போகஸ்
2024 தேர்தல் வேண்டாம்.. 2026 தேர்தல்தான் குறி என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால்தான் மோடியை கழற்றிவிட கூட எடப்பாடி தயாராக இருக்கிறார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் நம்முடன் நிற்க மாட்டார்கள். 2026ல் ஆட்சியை பிடிக்க முடியாது என்று எடப்பாடி நினைக்கிறார். எடப்பாடி இப்படி ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் அவருக்கு அந்த பவர் இல்லை. எடப்பாடிக்கு 15 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளது. எங்கே அண்ணாமலை தன்னை முந்திவிடுவார்.. அண்ணாமலை எம்பி ஆனால்.. அடுத்து முதல்வர் வேட்பாளர் அவர்தான். அண்ணாமலை கொங்கில் தன்னை முன்னேறிவிடுவார். தன்னை கவிழ்த்துவிடுவார் என்று எடப்பாடி அச்சப்படுகிறார்.

எடப்பாடி பிளான்
எடப்பாடி தனி ஆளாக வென்று விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் எடப்பாடிக்கு 15 சதவிகித வாக்குகள் மட்டுமே இருக்கிறது. அவர் தனியாக வெல்ல முடியாது என்பதை எடப்பாடி உணர வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் ஸ்டாலின் நட்பாகவே இருக்கிறார். ஸ்டாலின் சோனியாவை வாழ்த்துகிறார், இமாச்சல பிரதேச தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகிறார். திமுக காங்கிரசுக்கு இடங்களை குறைத்து கொடுத்தாலும், கூட்டணி உடையாது. இதனால் எடப்பாடி பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர் ஓபிஎஸ் இல்லாமல் தனித்து நின்றால் 15 சதவிகித வாக்குகள் வருவது கூட கடினம்.

பாஜக பிளான்
கேள்வி: சமீபத்தில் பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை "நாம் இன்னும் 4 சீட்டிற்காக எத்தனை காலம் அதிமுகவை தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும்" என்று கூறியதாக செய்திகள் வந்தன. அப்படி என்றால் பாஜக தனித்து போட்டியிடும் திட்டம் எதிலும் இருக்கிறதா?
தமிழக பாஜக எப்போதும் டெல்லி உத்தரவைத்தான் பின்பற்றும். இதில் அண்ணாமலை கருத்துக்களை டெல்லி கேட்கும். எடப்பாடிக்கு செக் வைக்க வேண்டும் என்றுதான் அண்ணாமலையை பாஜக களமிறங்கியது. அண்ணாமலை வெள்ளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் எடப்பாடிக்கு செக் வைக்க பாஜக அவரை களமிறக்கி உள்ளது. கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை + முருகன் என்று இரண்டு பெரிய தலைவர்கள் பாஜகவிற்கு இருக்கிறார்கள். எடப்பாடியை கவுண்டர் செய்ய வேண்டும் என்றுதான் அண்ணாமலையை களமிறக்கி உள்ளனர். இதனால் கொங்கிலேயே எடப்பாடிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

குஜராத் காவி
கேள்வி: குஜராத் நிகழ்வில் ஓபிஎஸ் காவி துண்டு போட்டுள்ளாரே.. அவர் தன்னை பாஜக காரராக நினைத்துக்கொள்கிறாரோ?
பதில்: அப்படி பார்த்தால் 10% இடஒதுக்கீட்டை ஏன் ஓபிஎஸ் எதிர்த்தார்? பாஜகவின் நிலைப்பாட்டிற்கு ஓபிஎஸ் இதில் எடுத்துள்ளார். பாஜகவிற்கு நிலைப்பாட்டிற்கு எதிராகத்தான் இருக்கிறாரே. அந்த இடத்தில் ஓபிஎஸ் பாஜகவை ஆதரிக்கவில்லையே. பாஜகவுடன் நட்பாக இருக்க ஓபிஎஸ் பார்க்கிறார். அவ்வளவுதான்.பாஜககாராக ஓபிஎஸ்ஸை பார்க்க முடியாது. பாஜகவை பயன்படுத்தி எப்படியாவது முன்னேற வேண்டும் என்றுதான் ஓபிஎஸ் நினைக்கிறார். இதற்காக அவரை பாஜக தலைவராக கருத கூடாது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications