வண்டிய கிளப்புங்க.. ரெடியாகும் எடப்பாடி பழனிசாமி.. மா.செக்கள் கூட்டத்தில் தேதி குறித்த அதிமுக!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. டிசம்பர் மாதத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தின்போது அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுத்தல், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு கட்சி சார்பில் குரல் கொடுக்க வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. இதை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், டிசம்பர் மாதத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications