ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு! இடியாப்ப சிக்கலில் தவிக்கும் எடப்பாடி பழனிச்சாமி! வசமாக மாட்டிக்கிட்டாரே
சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-தேதி நடக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு இருக்கும் எம்.எல்.ஏ. க்களின் வலிமையை வைத்து திமுக கூட்டணி 4 இடங்களையும், அதிமுக கூடடணி 2 இடங்களையும் கைப்பற்ற முடியும்.
6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் இருந்தால் தேர்தல் நடக்காது. போட்டியின்றி 6 பேரும் தேர்வு செய்யப்படுவர். கூடுதலாக ஒரு நபர் போட்டியில் இறங்கினாலும் தேர்தல் நடக்கும். சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் கூடுதலாக ஒரு வேடப்பாளரை நிறுத்த பிரதான கட்சிகள் விரும்பாது.

அதிமுக ராஜ்ய சபா சீட்டுகள்
அதிமுகவில் 2 சீட்டுக்கள் இருக்கின்றன. தற்போது பதவி காலியாகும் தம்பிதுரை மீண்டும் ஒருமுறை தனக்கு சீட் வேண்டும் என எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், முன்னாள் அமைச்சர் செம்மலை, தனது மகன் ஜெயவர்த்தனுக்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடியின் ஆல் இன் ஆலாக இருக்கும் சேலம் இளங்கோவன் உள்பட 8 பேர் முட்டி மோதுகின்றனர்.
அதேபோல, அதிமுக கூட்டணியிலுள்ள ஜி.கே. வாசன் (காலியாகும் இடத்தில் ஜி.கே.வாசனின் பதவியும் ஒன்று), தம்பிதுரையை போலவே, மீண்டும் ஒரு முறை எனக்கு சீட் ஒதுக்குங்கள் என அடம் பிடித்து வருகிறார். வாசனைப் போலவே, பாமக அன்புமணி, அ.ம.மு.க. தினகரன் ஆகியோரும் 1 சீட் கேட்டு இ.பி.எஸ்.சை நச்சரிக்கிறார்கள்.
ஒருபுறம் அதிமுக சீனியர்கள், மற்றொரு புறம் கூடடணிக் கட்சிகளின் தலைவர்கள் என நெருக்கடித் தருவதால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பிளான் என்ன?
இந்த நிலையில் அதிமுக மேல் மட்டங்களில் விசாரித்த போது, "ஒருவருக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புத் தரக்கூடாது. புதியவர்களுக்கு வாயப்புத் தர வேண்டும் என தம்பிதுரைக்கு எதிராக எதிர்ப்புகள் கட்சியில் இருக்கிறது. அதனால், இந்த முறை சட்டமன்றத்துக்குப் போட்டி போடுங்கள் என தம்பி துரையிடம் சொல்லிவிட்டார் எடப்பாடி. அவரைப் பொறுத்த வரை 1 சீட் செம்மலைக்கும், 1 சீட் அன்புமணிக்கும் தருவதாக அவர்களிடம் பிராமிஸ் பண்ணியிருக்கிறார்.
இப்போது வரை இதில் மாற்றம் இல்லை. மோடி மற்றும் அமித்ஷா மூலம் ஜி.கே. வாசன் காய் நகர்த்தி வருவதால் கூட்டணி கட்சிகளில் அன்புமணிக்கா? வாசனுக்கா? என்கிற ஊசலாட்டம் கடந்த 2 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது " என்கிறார்கள்.
திமுக தரப்பு பிளான் என்ன?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2026-ல் 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போதுள்ள சட்டமன்ற பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணி இந்த 6 இடங்களில் 4 முதல் 5 இடங்களை எளிதாகக் கைப்பற்றும்.
இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், திமுக தனது வசம் உள்ள இடங்களில் 2-3 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கத் தயாராகி வருகிறது.
பதவி முடியும் 6 எம்.பி-க்கள் யார்?
தற்போது பதவி முடியும் 6 உறுப்பினர்களின் பட்டியல் இதோ:
திருச்சி சிவா (திமுக)
என்.ஆர். இளங்கோ (திமுக)
அந்தியூர் பி. செல்வராசு (திமுக)
டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு (திமுக)
எம். தம்பிதுரை (அதிமுக)
ஜி.கே. வாசன் (தமாகா)
அந்த 'லக்கி' கட்சிகள் எவை?
கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இந்த இடங்கள் பின்வரும் கட்சிகளுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது:
தேமுதிக-விற்கு ஏன் முன்னுரிமை?
திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக-விற்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் காரணம் இருக்கிறது.
கடந்த 2019 மற்றும் 2024 தேர்தல்களின் போது, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இருந்தபோது, எல்.கே. சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக தலைமை உறுதி அளித்திருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு அந்த வாக்குறுதியை அதிமுக நிறைவேற்றவில்லை. ஜி.கே. வாசனுக்கும் மற்றவர்களுக்கும் இடங்களை ஒதுக்கிவிட்டு, தேமுதிகவை அதிமுக ஏமாற்றியது.
இந்த 'துரோகத்தை' அவ்வப்போது சுட்டிக்காட்டும் தேமுதிக, தற்போது திமுகவிடம் அந்த இடத்தை ஒரு முக்கிய நிபந்தனையாகவே கோரியுள்ளது. கமல்ஹாசனுக்கு ஏற்கனவே சீட் வழங்கப்பட்டுவிட்டதால், இந்த முறை எல்.கே. சுதீஷுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications