20 நிமிடம்.. கைமாறிய அதிமுக்கிய "பைல்ஸ்".. பெரும் சிரிப்போடு வெளியே வந்த எடப்பாடி.. ஆக்சன் அமித் ஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.

டெல்லி சென்று இருக்கும் எடப்பாடி பழனிசாமி சற்று நேரத்திற்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் மிக முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

 சந்திப்பு

சந்திப்பு

இந்த சந்திப்பு இன்று 20 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்பி.வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி முக்கியமான கோப்பு ஒன்றை கொடுப்பார் என்று முன்பே தெரிவித்து இருந்தோம். அதன்படியே எடப்பாடி பழனிசாமி இன்றி கையில் ஒரு கோப்புடன்தான் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக மாஜி எம்எல்ஏக்களுக்கு எதிராக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்து வருகிறது. பல்வேறு மாஜி அமைச்சர்கள் ரெய்டில் குறி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஆளும் கட்சி

ஆளும் கட்சி

இந்த நிலையில்தான் ஆளும் கட்சி புள்ளிகளுக்கு எதிராக கோப்புகளை இன்று எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. அதாவது ஆளும் கட்சியில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள் மீதான புகார்கள் அடங்கிய கோப்புகளை எடப்பாடி அமித் ஷாவிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அதற்கான முக்கிய பைல்ஸ்களை பகிரும் விதமாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த சந்திப்பிற்கு பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை. அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பில், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பை நடத்தினோம். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை, என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

அரசியல்

அரசியல்

வெளியே அரசியல் பேசவில்லை என்று எடப்பாடி சொன்னாலும், உள்ளே நிறைய அரசியல் பேசப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். முகம் முழுக்க பெரிய சிரிப்புடன் அவர் வெளியே வந்தார். எடப்பாடி முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு கடந்த சில மாதமாக இல்லை. அந்த சிரிப்பு நீண்ட நாட்களுக்கு பின் இன்று காணப்பட்டது. காரில் சிரித்தபடியே சந்தோசமாக அமர்ந்து அவர் திரும்பி சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+