பாஜக தலைவர் அண்ணாமலையா? ஏழுமலையா? அய்யோ பாவம் எடப்பாடியே கன்பியூஸ் ஆயிட்டாரு!
சென்னை : அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சிவி சண்முகம் தர்மர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலை என்பதற்குப் பதிலாக ஏழுமலை என்று கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளது. திமுக வேட்பாளர்களான கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரமும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக வேட்பாளர்கள்
இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி," அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தர்மர் ஆகிய இருவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாசும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அதிமுக வேட்பாளர்களுக்கு தங்கள் கட்சியினர் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆதரவளித்தவர்களுக்கு நன்றி
சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது இரண்டு ராஜ்ய சபை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலே எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.

எடப்பாடி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்டங்களுக்கு தான் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சிதைந்து விட்டது. தலைநகரம் சென்னை உட்பட பல இடங்களில் கொலை, கொள்ளை என சட்ட விரோத செயல்கள் நிறைவேற்றி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் திமுக அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது என கடுமையாக குற்றம் சாட்டினார்.

அண்ணாமலையா? ஏழுமலையா?
முன்னதாக தனது பேச்சின் தொடக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்பதற்கு பதிலாக ஏழுமலை என மாற்றி பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. உடனே சுதாரித்து அருகில் இருந்த கேபி முனுசாமி உள்ளிட்டோர் இதனையடுத்து உடனடியாக தனது பேச்சை மாற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என கூறினார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது












Click it and Unblock the Notifications