பச்சை கொடி.. அமித்ஷாவிடம் கை குலுக்கிய எடப்பாடி! அதிரும் அதிமுக! முக்கிய போகஸே இதுதான்! நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இருவரும் சந்தித்து தற்போது ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. கன்னித்தீவு கதை கூட முடிந்துவிடும், ஆனால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் முடிவு பெறாது என்று சொல்லும் அளவிற்கு மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது.

அதிமுகவில் ஒற்றை தலைவராக உருவெடுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார். பொதுக்குழு மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.

அதேபோல் அவரின் தேர்விற்கு சென்னை உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமரவும் ஒப்புக்கொண்டு உள்ளது. இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

விசாரணை

விசாரணை

இந்த வழக்கு விசாரணை இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அவசர பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். நேற்று இரவோடு இரவாக அவர் டெல்லிக்கு சென்றார். முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார்.ஆனால் இந்த பயணத்தில் எடப்பாடி பழனிசாமியால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை.

சந்திப்பு

சந்திப்பு

அதன்பின் பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது அவரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்றார். ஆனால் தனியாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி அனுமதி கொடுக்கவில்லை.கூட்டத்தோடு கூட்டமாக விமான நிலையத்தில் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி சந்தித்தார். இரண்டு முறையும் எடப்பாடி ஏமாற்றத்துடன்தான் திரும்பி வந்தார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

பிளான் என்ன?

பிளான் என்ன?

3 நாள் பயண திட்டம் இதற்காக போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று அமித் ஷாவிடம் ஆலோசனை செய்கிறார். எடப்பாடியை சந்திக்க அமித் ஷா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இஇந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட மாற்றங்களுக்கு இன்னும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் தரவில்லை.

ஒப்புதல்

ஒப்புதல்

இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கினால் ஓ பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக அதை எதிர்த்து பெரிதாக போராட முடியாது. தேர்தல் ஆணைய முடிவே இறுதியானதாக இருக்கும். அதனால் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் தனக்கு இருக்கும் பதவி, உரிமை, பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது பற்றி எடப்பாடி பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் எடப்பாடி பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+