விடாது கறுப்பு- எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம்- சபாநாயகரை சந்தித்து வலியுறுத்திய இபிஎஸ்
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தமது கோஷ்டியை சேர்ந்த ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகள் பிளவுபட்டுள்ளன. இதனையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி தரப்பு நீக்கியது. ஓபிஎஸ்-க்கு பதில் ஆர்பி உதயகுமாரை, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமித்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு இபிஎஸ் கோஷ்டி கடிதமுன் அனுப்பியது. ஆனால் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது வழக்கம் போலவே, எதிர்க்கட்சித் தலைவரான இபிஎஸ்க்கு அருகேதான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என ஓபிஎஸ்-க்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நடப்பாண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையின் சிலவற்றை படிக்காமல், சொந்தமாக சிலவற்றை படித்திருந்தார். இது சபை குறிப்பில் இடம்பெறாது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தமிழ்நாடு- தமிழகம் பேச்சு விவகாரத்தில் ஆளும் திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள், ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினர். இப்படி நடப்பாண்டின் முதல் நாள் கூட்டமே அனல் பறந்தது.

இந்நிலையில் அதிமுக விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். மேலும் உதயகுமாருக்கான இருக்கை குறித்தும் விவாதித்தனர். இன்றைய சந்திப்பின் அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், கே.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனிடையே தங்களது கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு, உதயகுமாருக்கான இருக்கை ஒதுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் அதிமுகவினர் விவாதித்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு தங்களது கோரிக்கையை நிராகரித்தால், சட்டசபைக்குள் முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்வது அல்லது சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பது என அதிமுக இபிஎஸ் கோஷ்டி முடிவு செய்துள்ளதாம்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications