அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான திண்டுக்கல் சீனிவாசன் திடீரென இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வனத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவு
சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளத் திண்டுக்கல் சீனிவாசன் சென்னைக்கு வந்திருந்தார். இதற்கிடையே அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறப்புச் சிகிச்சை
உணவு ஒவ்வாமை காரணமாகத் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
பூத் கமிட்டி
தமிழ்நாட்டில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போது அதிமுக பாஜக இடையேயான கூட்டணி இறுதியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் இருந்தாலும் கூட இப்போதே தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்க அதிமுக பாஜக கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதில் கட்சியின் பொருளாளரும், மாஜி அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் சட்டசபையில் பங்கேற்கச் சென்னை வந்த நிலையில், அப்போது தான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications