ஜெயலலிதா மீது அவதூறா? மத யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அதிமுக ஜெயக்குமார் தாக்கு
சென்னை: தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மதத் தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பதாவது: இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் உரை!

இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அம்மா அவர்களின் அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது.
அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்!
ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும்
மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும் சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை!
தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பி அண்ணாமலை,தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.
முல்லை பெரியாறு விவகாரம்,மேகதாது-காவிரி விவகாரம்,பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டை சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது.
இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும்,தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும்,தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.
மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது.
ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?
தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் அம்மாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்! இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் 1995 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்துத்துவா என்னவென்பது பற்றிய வழக்கின் தீர்ப்பு அது.
அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும். இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. அது மதம் கிடையாது. அனைவரையும் அரவணைப்பதுதான் இந்துத்துவா. 1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா ராஜ்ய சபா எம்பியாக நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஜம்மு காஷ்மீரில் ஆர்டிக்கள் 370-ஐ எடுக்கப்பட வேண்டும் என்று பேசினார். ஆனால், இன்றைக்கு ஆர்டிக்கள் 370 பற்றி அதிமுகவின் நிலைப்பாடு என்ன.
இதேபோல் 1992-ல் கரசேவை என்பது தவறான வார்த்தை கிடையாது என்று அதற்கு ஆதரவாக பேசினார் ஜெயலலிதா. கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் அவர். இதேபோல், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ராமர் கோயில் கட்ட கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதன் நிறைவு விழாவில் அத்வானி பங்கேற்றார்.
அதேபோல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றும் பேசிய ஜெயலலிதா, ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சொன்னார். ஆனால் இன்றைக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன, ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து தற்போதைய அதிமுக விலகி செல்கிறது. நான் கூறுவதை அதிமுக எதிர்த்தால் விவாதத்திற்கு பாஜக தயாராக உள்ளது என்றார். மேலும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்னையில் தகர்க்கப்பட்ட போது அதை கட்டிக் கொடுப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா உள்ளிட்டோர் கண்டித்தனர். அண்ணாமலையின் கருத்தை ஆதரித்து தமிழிசை சவுந்திரராஜனும் பேசியிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கு நிச்சயம் சென்றிருந்திருப்பார் என்றும் தமிழிசை தெரிவித்திருந்தார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications