400 பவுன் தரலைல்ல! ஓட்டுரிமை மட்டும் எதுக்கு! மருமகளை அடைத்து வைத்ததாக மாஜி எம்எல்ஏ மீது புகார்
சென்னை: வரதட்சிணை கொடுக்காததால் ஓட்டு போட உரிமையே இல்லை என கூறி தன்னை 3 தேர்தல்களுக்கும் வெளியே விடாமல் அடைத்து வைத்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்கள் உயர் பதவியில் வகிப்பவர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட வரதட்சிணை கொடுமை குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் தற்போது புதியதொரு வரதட்சிணை புகார் எழுந்துள்ளது. அதாவது சோழிங்கநல்லூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கே.பி. கந்தனின் மருமகள்தான் அந்த புகாரை தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு 1000 பவுன் வரதட்சிணையாக கேட்ட நிலையில் எனது தந்தையால் 600 பவுன் மட்டுமே போட முடிந்தது. ஆனால் அந்த நகை போதவில்லை என கூறி தன்னை கொடுமைப்படுத்தியதாக மாஜி எம்எல்ஏ மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரை கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எங்களது முதல் திருமண நாளன்று நான் 4 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அப்போது என்னை ஹோட்டலுக்கு உணவு சாப்பிட அழைத்து சென்றார். அங்கு எங்களுக்கு தாய் வீட்டிலிருந்து தங்க பரிசு ஏதும் கொடுக்கவில்லை என கூறி ஹோட்டலில் வைத்தே என்னை அடித்தார். என்னை பல முறை அடித்துள்ளார்.
பிறகு வீடியோ எடுத்து நான் வழுக்கி விழுந்துவிட்டதாக சொல்லு என என்னை கட்டாயப்படுத்துவார். இந்த விஷயங்கள் உன் அப்பாவுக்கு தெரியக் கூடாது என மிரட்ட தொடங்கினார். என் அப்பாவிடம் நான் சொல்லி அதை அவர் மாமனாரிடம் கேட்ட போது அவரும் என்னை மிரட்ட தொடங்கினார்.
இந்த டார்ச்சரை பொறுக்க முடியாமல் நான் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். அப்போது கூட அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதே இல்லை. என் கணவரின் அக்கா ஒரு மருத்துவர் என்பதால் காயத்திற்கு மருந்து மட்டும் போட்டுவிட்டார். தையல் போடும் அளவுக்கு ஆழமாக கிழித்துக் கொண்ட போதிலும் அவர்கள் அதை செய்யவில்லை.
கையை அறுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றால் அது போலீஸ் கேஸாகும் என்பதால் என்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துக் கொண்டு சிகிச்சை கொடுத்தனர். 2021 ஆம் ஆண்டு மே மாதம் என்னையையும் என் குழந்தையையும் வீட்டை விட்டே அனுப்பிவிட்டார்கள். நகை இல்லாமல் வீட்டுக்குள் வராதே என கூறி என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.
என் அப்பா நியாயம் கேட்ட போதுகூட அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை. என்னையும் அவர்களது வீட்டிற்குள் சேர்க்கவே இல்லை. நடுவில் என் மாமனார் பிரச்சினையை சரி செய்வதாக கூறி என் கணவரை விட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இதற்கு பிறகும் நான் அவர்களுடைய கொடுமைகளை எல்லாம் வெளியே சொல்ல வேண்டாம் என்பதால் நான் வெளியே சொல்ல வந்தேன்.
அந்த வீட்டில் இருந்த வரை 3 தேர்தல்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தல், எம்எல்ஏ தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய 3 தேர்தல்களுக்கும் என்னை ஓட்டு போடவே விடவில்லை. நகைக் கொடுக்கவில்லை, பணம் கொடுக்கவில்லை. உனக்கு ஓட்டு போட உரிமை கிடையாது என கூறி என்னை அடைத்துவைத்தனர். ஒரு தேர்தலில் என் மாமனார் போட்டியிட்ட தொகுதியில் கூட என்னை வாக்களிக்க விடவில்லை.
என் கணவர் போட்டியிட்ட கவுன்சிலர் தேர்தலிலும் என்னை வாக்களிக்க விடவில்லை. எனது புகாரை அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்கள். அங்கு எனது புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications